news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அநுரவும் எந்த அதிசயங்களையும் செய்யப்போவதில்லை

10 Aug, 2026
தமிழ்ப்பேசும் கட்­சிகள், கடந்த வாரம் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகி­யோரை சந்­தித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து உரை­யா­டி­யி­ருந்­தன. ஆனால், இந்த சந்­திப்பில் கட்­சிகள் எதிர்­பார்த்த அதி­ச­யங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை.  இது எதிர்­பார்க்­கப்­பட்ட விடயம் தான்.

இலங்கை ஜனா­தி­பதி  ஆச­னத்தில் அமரும் எந்த   சிங்­கள பெளத்த  அர­சி­யல்­வா­தியும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை ஒரே கண்­ணோட்­டத்­தி­லேயே அணு­குவர். இது வர­லாறு கற்றுத்தந்த தந்த பாடம். இதை அறிந்தும்    தமிழ்ப் பேசும் கட்­சிகள் ஏன்  சந்­திப்பை மேற்­கொண்­டன? தாம் ஒன்­றி­ணைந்­த­மைக்கு ஏதா­வது காய் நகர்த்­தல்­களை  தேசிய மட்­டத்தில் மேற்­கொள்ள வேண்டும் என்ற நிர்ப்­பந்தம்  இவர்­க­ளுக்­குள்­ளது. அதை விட, ‘இவர்கள் இணைந்து எமக்கு என்ன செய்து விடப்­போ­கின்­றனர்’ என்ற எதிர்ப்­பார்ப்பு இவர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கும் உள்­ளதே?

  தமிழ்ப் பேசும் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தமது மக்­களின் பிரச்­சி­னை­களைப் பேசப்­போ­கின்­றனர் என்­ப­தை­விட, அவர்கள் எதிர்க்­கட்சி வரி­சை­யி­லி­ருந்து  வந்­துள்­ளனர் என்ற செய்தி ஜனா­தி­ப­திக்கு இனித்­தி­ருக்கும். 

ஜனா­தி­ப­தியை சந்­தித்தல் என்­பது தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஊடாக சாத்­தி­யப்­பட்­டி­ருக்­கலாம். அது குறித்து இரு­வ­ருக்கும் இடையில் தொலை­பேசி உரை­யா­டல்கள் இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், இதை அனைத்­து­த­ரப்­பி­னரும் இணைந்த ஓர் உத்­தி­யோ­க­ப்பூர்வ சந்­திப்­பாக இடம்­பெ­றச்­செய்­யவே ஏனைய கட்சித் தலை­மைகள் விரும்­பி­யி­ருக்­கின்­றன.

அதன்­படி ஒரு கட்­சி­யி­லி­ருந்து மூன்று பேர் வரை கலந்து கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் சம்­ம­தங்­களும் கட்­சி­களின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் மத்­தியில் பெறப்­பட்­டி­ருந்­தாலும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி  எம்.பி.க்கள் சார்­பாக வே.இரா­தா­கி­ருஷ்ணன்  மாத்­தி­ரமே கலந்து கொண்­டி­ருக்­கின்றார். இதை ஜனா­தி­ப­தியும் எதிர்ப்­பார்த்­தி­ருக்க மாட்டார் எனலாம். தன்னை சந்­திக்க வந்த கட்சிப் பிர­மு­கர்­க­ளிடம் அவர் மனோ எம்.பி. வருகை தராமை  குறித்து கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்றார். ஆனால்,  மனோ கணேசன் எம்.பி. வருகை தந்­தி­ருந்­தாலும் கூட,  ஆறு கட்­சி­களும் முன் வைத்த கோரிக்­கைக்கு ஜனா­தி­ப­தியின் பதில்­களில் எந்த வித்­தி­யா­சங்­களும் இருந்­தி­ருக்­காது என்­பது திண்ணம்.  

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்ட  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஜன­நா­யக தமிழ்த்தேசியக் கூட்­டணி மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஆகிய ஆறு தமிழ்ப் பேசும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் முன்­வைத்த பிர­தான விடயம், புதிய அர­சி­ய­ல­மைப்பு , மாகாண சபைத் தேர்தல், அர­சாங்­கத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள   வடக்கு, கிழக்கு பகுதி  காணி மீட்பு மற்றும் மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் காணி உரிமை என்­ப­தாக இருந்­தது. புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து கருத்து வெளி­யிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்­சியின்  பொதுச் செய­லாளர் எம்.ஏ. சுமந்­திரன், புதிய அர­சி­ய­ல­மைப்பை வரைவு செய்யும் பணி­யா­னது ஒரு தனி அர­சியல் கட்­சியால் மேற்­கொள்­ளப்­ப­டாமல் பரந்த அள­வி­லான தேசிய உரை­யா­டலின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும், இச்­செ­யற்­பாடு  இலங்­கையின் அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் பிரச்­சி­னைக்கு  தீர்வு காண்­ப­தாக அமைய வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். 

புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நிறை­வேற்று அதி­கார முறை ஒழிப்பு விட­யங்­களில் அர­சாங்கம் உறு­தி­யா­க­வுள்­ளது என ஜனா­தி­பதி அநுர கூறி­யுள்ளார். சந்­தி­ரிகா அம்­மையார் காலத்­தி­லி­ருந்து இவ்­விரு விட­யங்­க­ளையும், முன்னாள் ஜனா­தி­ப­திகள் காலத்­துக்குக் காலம் கூறி வரு­வதால் அநு­ர­வையும் அந்த பட்­டி­யலில் தாரா­ள­மாக சேர்க்­கலாம்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அது குறித்த நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் அறிக்கை வந்­த­வுடன் தேர்தல் குறித்து தீர்­மா­னிக்­கப்­படும் என்று பதி­ல­ளித்­துள்ளார் ஜனா­தி­பதி. 

 இந்த நாட்டில் தெரி­வுக்­கு­ழுக்கள், ஆணைக்­கு­ழுக்கள் என்­பன காலத்தை விர­ய­மாக்கும் அதே வேளை இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவே உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை கடந்த வர­லாறு கூறும். எனவே இப்­போ­தைக்கு எந்த அறிக்­கையும் வராமல் அர­சாங்கம் பார்த்­துக்­கொள்ளும். அதற்குக் காரணம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு மூன்று வரு­டங்கள் இருக்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு காலப்­ப­கு­திக்குள் இலங்­கையில் எந்த தேர்­தல்­களும் இதற்கு முன்­ப­தாக  இடம்­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை.  

காணி விவ­காரம் குறித்து முன் வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ள பதில் விசித்­தி­ர­மா­க­வுள்­ளது. வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணிகள் அனைத்­தையும் இரா­ணு­வத்­தினர் விடு­விக்­க­வில்­லையா என   கேள்­வி­யெ­ழுப்­பிய ஜனா­தி­பதி, அது குறித்து இரா­ணுவத் தரப்­பிடம் அறிக்­கை­யொன்றை கேட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். 

நாட்டின் ஜனா­தி­ப­தியே முப்­ப­டை­க­ளி­னதும் தலைமைத் தள­பதி ஆவார். வடக்கு, கிழக்குப் பகு­தி­களில்  நிலவும்  காணி பிரச்­சினை  தொடர்­பான   தக­வல்­க­ளையும் தர­வு­க­ளையும் நாட்டின் ஜனா­தி­பதி இரா­ணு­வத்­திடம் அறிக்­கை­யா­கத்தான் கேட்டு பெற வேண்டும் என்­பதை எவ்­வாறு நம்­பு­வது?  மாத்­தி­ர­மின்றி, மலை­யக பெருந்­தோட்ட சமூ­கத்­துக்கு காணி உரிமை பற்றி இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஜீவன் தொண்­டமான் கருத்­து­களை முன்­வைத்­த­போது அதற்கு ஜனா­தி­பதி, காணி வழங்­கு­வது எளி­தான விடயம் அல்ல என்றும், வளங்கள் மற்றும் மலை­யக சுற்­றுச்­சூழல் பாது­காப்பு தொடர்­பான சவால்கள் உள்­ள­தாகத் தெரி­வித்­த­தோடு எந்­த­வொரு மக்­களும் வசிக்­காத மலைப்­ப­கு­தி­களில் கூட நில வெடிப்­புகள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அது தொடர்­பான நிலை­யான தன்­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தனி­யா­ன­தொரு அதி­கார சபை ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

மலை­யகப் பிர­தேச புவி­யியல் மற்றும் நிலப்­பி­ர­தேசம்  தொடர்பில் இவ்­வாறு துல்­லி­ய­மாக தக­வல்­க­ளை வெளி­யிடும் ஜனா­தி­பதி,  வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பில் அறிக்கை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலை­யி­லி­ருக்­கின்றார். அவ­ரது பதில்­க­ளி­லி­ருந்து இப்­போ­தைக்கு வடக்கு, கிழக்கு காணி விடு­விப்பு,  மலைய சமூ­கத்தின் காணி உரிமை பிரச்­சி­னைகள்  அடுத்த ஜனா­தி­பதித் தேர்தல் வரை தீரப்­போ­வ­தில்லை என்ற முடி­வுக்கு வரலாம்.

 ஜனா­தி­ப­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­குப்­பின்னர் எதிர்க்­கட்சித் தலை­வரை ஏன் தாம் சந்­தித்­தோமோ என்ற கேள்வி  ஆறு கட்­சி­க­ளி­னதும் பிர­தி­நி­தி­களின் மனதில்  நிச்­ச­ய­மாக எழுந்­தி­ருக்கும். எப்­போது எதை பேசு­வது என்ற நிகழ்ச்சி நிர­லி­லி­ருந்து வில­கிச்­சென்று கொண்­டி­ருக்கும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித், புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து தான் ஆராய்ச்­சியில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார்.

 மேலும் தான் ஒரு சிங்­கள பெளத்­த­ரா­கவே இருப்­பதில் பெரு­மை­ய­டை­வ­தாக  சம்­பந்­த­மில்­லாத கதை ஒன்­றையும்  கூறி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  மாகாண சபைத் தேர்தல் மாத்­தி­ர­மின்றி 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் தமிழ்ப் பிர­தி­நி­தி­க­ளிடம்  சஜித் கூறி­யுள்ளார். இந்­தி­ய-­,இ­லங்கை  ஒப்­பந்­தத்தை   கடு­மை­யாக எதிர்த்து நின்ற முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­சவின் மக­னாக அன்றி, ஆட்சிக் கதி­ரையில் அமர ஆசைப்­படும் ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாத்­தி­ரமே அவரால் இவர்­க­ளிடம் பேச முடிந்­துள்­ளது.

ஏன் இவர்கள் எதிர்க்­கட்சித் தலை­வரை சந்­திக்கச் சென்­றார்கள்,  அதி­கா­ர­மிக்க ஜனா­தி­ப­தியால் முடி­யாத காரி­யங்­களை எவ்வாறு எதிர்க்­கட்சித் தலைவர் செய்­யப்­போ­கின்றார் போன்ற கேள்­விகள் எழு­வது சகஜம். தமிழ்ப் பேசும் கட்­சி­களின் கூட்டு அல்­லது பேரவையினர்  எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்­தி­ருக்­கின்­றனர். 

எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டு மக்­க­ளுக்­கான உரி­மை­களைப் பற்றி பேச­லாமே ஒழிய அதை நிறை­வேற்றும் அதி­காரம் ஆளுங்­கட்­சிக்கே உள்­ளது. ஆனாலும் தாம் முன்­வைக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் என்ன தீர்­வு­களை கொண்­டி­ருக்­கின்றார் என்­பதை இவ்­வா­றான சந்­திப்­புகள் மூல­மா­கத்தான் அறிந்து கொள்ள முடியும். அதில் தமிழ்ப் பேசும் கட்­சி­க­ளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்­சி­யது என்­பதை கூறத்­தே­வை­யில்லை.  

  இலங்­கைக்­கான இந்­தியத் தூது­வரை சந்­தித்து தமிழ்க் கட்சி பிர­மு­கர்கள்  இந்­தி­ய–­இ­லங்கை ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபை முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதில் இந்­தியா ஆற்­றிய முக்­கிய பங்­க­ளிப்பும் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­துடன் மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான அழுத்­தங்­களை அர­சாங்­கத்­துக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைப் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்புப் பற்­றிய கருத்­தா­டல்­களில்  இந்தியத் தூதுவர் அதிக அக்கறை காட்டவில்லையென்றே தெரிகின்றது. இந்தியாவின் தலையீட்டில் உருவான 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபை முறை உருவாக்கத்தில் இந்தியா தொடர்ச்சியான அக்கறையை காட்டி வருகின்றது. 

இலங்கையின் உள்நாட்டு நிர்வாக ஆட்சியில் இந்தியா நேரடியாக சம்பந்தப்பட்ட விடயம் அது. ஆனால்  வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்று  வழக்கில் வெற்றி பெற்ற  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தான் இப்போது ஜனாதிபதி.  புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகினால்  குறித்த திருத்தச் சட்டத்துக்கு ஏதாவது ஆபத்து வரலாம் என இந்தியா நினைத்திருக்கலாம்.

எது எப்படியானாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்கின்றது என்பதை இச்சந்திப்பு மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வு விவகாரத்தில்  மஹிந்த, ரணில் காலத்தில் முடியாததை இனி எக்காலத்திலும் எவராலும்  செய்ய முடியாது என்பதை தமிழ்த் தரப்பினர் உணர்ந்தால் சரி. 

 சிவலிங்கம் சிவகுமாரன்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!