news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அநுராதபுரத்தில் கோர விபத்து : ஐவர் மரணம் - பலர் படுகாயம்

10 Nov, 2026
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் பாரிய விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!