சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இலங்கைக்கான சவூதி தூதுவருடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.
அதேபோல் உலமா சபை ஊடாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். இவ்விடயத்தின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனோஜன்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். இவ்விடயம் குறித்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் ஒன்றிணைந்து கொழும்பில் உள்ள சவூதி தூதுவரை சந்திக்கவுள்ளோம்.அதனைத் தொடர்ந்து உலமா சபையுடன் கலந்துரையாடவுள்ளோம்.
ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளோம். இந்த விடயத்தில் ஜனாதிபதி சவூதி அரசுடன் நேரடியாக கலந்துரையாட வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளோம்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் ஊடாக முரண்பாடான கருத்துக்களை பகிர்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!