news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

25 Oct, 2026
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள தெற்கு துறைமுக நகரமான பண்டார் அ அப்பாஸ் மீது பறந்த அமெரிக்காவின்  ரக ஆளில்லா விமானத்தை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலயமைப்பின் கீழ் இயங்கும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஆளில்லா விமானத்தை வழிமறித்து அழித்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த 20 ஆம் திகதி ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், அதேவேளையில், இராஜதந்திர ஒப்பந்தத்திற்கான வாய்ப்பும் திறந்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய போர் பற்றிய பேச்சுக்கள் தங்களது கொள்கைகளை மாற்றாது என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் அமெரிக்கா தீவிர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பு சனிக்கிழமை (24) ஏடன் நகரில் உள்ள அல்-நாசர் முகாம், கடற்படைத் தளம் மற்றும் விமான நிலையத்தைக் இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் மெக்கா மற்றும் ஜித்தாவில் ஏவுகணைச் சிதைவுகள் பதிவாகியுள்ள நிலையில், சவூதியின் தென்மேற்குப் பகுதியான காமிஸ் முஷைத் நோக்கி ஹூதிகள் ஏவிய க்ரூஸ் ஏவுகணையைச் சவூதிப் படைகள் வழிமறித்து அழித்துள்ளன.




கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!