news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்க உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்

29 Oct, 2026
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காகவே பிரத்தியேக கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க சொகுசு கப்பலொன்று எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கம்போடியா துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சொகுசு கப்பல் போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையில், அதன் 200க்கு மேற்பட்ட பயணிகள் கப்பலை விட்டு வெளியேற்றப்பட்டதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஃப்ளோரிடா மாகாணத்தில் “வில்லா வி ரெசிடன்சஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான எம்வி ஒடிஸி (MV Odyssey)  என்ற சொகுசு கப்பலே தற்போது கம்போடியா சிஹானோக்வில் துறைமுகத்தில் (Sihanoukville) நிறுத்தப்பட்டிருக்கிறது. 

திடீரென ஏற்பட்ட நிதிச்சுமை, மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு முதலான காரணங்களால் இந்தக் கப்பல் அதன் பயணத்தை தொடர முடியாத நிலையில் இருப்பதாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த ஒடிஸி கப்பலின் அறையொன்றுக்கான மாத எரிபொருள் செலவானது முன்பு 1800 டொலராக இருந்த நிலையில், தற்போது அந்த செலவு விலையானது 6000 - 8000 டொலராக உயர்ந்துள்ளது. 

கடந்த 2024 ஒக்டோபரில் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் அதன் உலக  சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தது. 

இந்த கப்பலானது 203 பயணிகளையும் 156 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இம்முறை சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பயணத்தை இடைநிறுத்தி, பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும் பயணிகளுக்கான தங்குமிட வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கப்பல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். எனினும், தமக்கான எந்த வசதியும் இழப்பீடுகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!