அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் முத்தரப்பு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ள சூழலில், வட கொரியா தனது 2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது.
அணுவாயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட இப்போர்க் கப்பலை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தனது மகளுடன் இணைந்து வான்சன் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சேவையில் இணைத்துள்ளார். இப்போர்க்கப்பல் 5,000 தொன் எடை கொண்டதாகும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வட கொரியத் தலைவர், ‘நாட்டின் சுயமரியாதை, மன உறுதி மற்றும் வலிமையான மனோபாவத்தின் விளைவு தான் இக்கப்பல் என்றும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இப்போர்க்கப்பல், வட கொரியாவின் எதிரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் வட கொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையாக 5 நாட்கள் முத்தரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியைத் தென்கொரியாவின் ஜெஜு தீவுப் பகுதியில் ஆரம்பித்திருப்பது தெரிந்ததே.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!