news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்காவில் வான் சாகசத்தின்போது 2 போர் விமானங்கள் மோதி விபத்து

18 May, 2026

அமெரிக்காவில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் ஜெட் விமானங்களே வான்பரப்பில் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. 

எனினும், விமானங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, அவற்றில் இருந்த விமானிகள் பரசூட் உதவியுடன் பாதுகாப்பாக வான்வெளியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!