அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்தப்படும் முனையப் பகுதியில் மின்னல் தாக்கியதில், இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் வாகனங்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.
அம்பாந்தோட்டை பகுதியில் நிலவிய கடும்மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையின்போது, துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முனையப் பகுதியில் மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வாகன முனையப் பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!