news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆற்றில் குதித்த பெண்ணால் பரபரப்பு

28 Jul, 2026
ஓட்டமாவடி பாலத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் திடீரென ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், இரு இளைஞர்களின் துரிதச் செயலால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பாலத்தின் ஊடாக முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர், தனக்குத் தொலைபேசியில் அவசரமாக உரையாட வேண்டும் எனக் கூறி முச்சக்கர வண்டியை உடனடியாக நிறுத்துமாறு சாரதியைக் கேட்டுள்ளார். அப்பெண்ணின் பேச்சை நம்பி சாரதி வண்டியை நிறுத்திய அடுத்த கணமே, அப்பெண் திடீரென ஆற்றில் குதித்து நீருக்குள் தத்தளிக்கத் தொடங்கியுள்ளார்.

இதனைக் கவனித்த அருகில் இருந்த இரு இளைஞர்கள், சற்றும் தாமதிக்காமல் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றை எடுத்துக்கொண்டு உடனடியாக ஆற்றுக்குள் சென்று அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இச்சம்பவத்தில் மீட்கப்பட்ட பெண், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!