news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இடம்­மாறும் சீனாவின் முகம்

08 Aug, 2026
இலங்­கையை தங்­களின் மூலோ­பாய கேந்­தி­ர­மாக பார்க்­கின்ற - உலகின் இரண்டு முக்­கிய நாடு­களின், கொழும்பில் உள்ள தூத­ர­கங்­களில் இப்­போது தூது­வர்கள் யாரும் இல்­லாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கத் தூது­வ­ராக நான்கு ஆண்­டுகள் பணி­யாற்­றிய ஜூலி சங், தனது பணிக்­கா­லத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி,  6 மாதங்­க­ளுக்கு மேலா­கியும், புதிய தூதுவர் இன்­னமும் பொறுப்­பேற்­க­வில்லை.

இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூது­வ­ராக பெய­ரி­டப்­பட்ட எரிக் மேயரின் நிய­ம­னத்­திற்கு அமெ­ரிக்க செனட்  கடந்த மே 18ஆம் திகதி, 46-43 என்ற வாக்­குகள் அடிப்­ப­டையில் அங்­கீ­காரம் வழங்­கி­யது.

ஆயினும்,  அவர் இன்னும் இலங்­கைக்கு வந்து பத­வியைப் பொறுப்­பேற்­க­வில்லை.

இந்தச் சூழலில், அமெ­ரிக்க தூத­ர­கத்தில் பதில் தூது­வ­ராக கடந்த ஜன­வரி மாதம் தொடக்கம் பணி­யாற்றி வந்த ஜெய்ன் ஹொவெலின் பதவிக் காலமும் நிறை­வ­டை­கி­றது.

இலங்கை மீது உன்­னிப்­பான கவ­னத்தைக் கொண்­டுள்ள அமெ­ரிக்­காவின் நிலை இப்­ப­டி­யென்றால்,  இன்­னொரு பக்­கத்தில் சீனத் தூது­வ­ராக ஆறு ஆண்­டுகள் பணி­யாற்­றிய கீ சென்ஹொங் ஜூலை 31ஆம் திக­தி­யுடன் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்­பி­யி­ருக்­கிறார்.

கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக இலங்­கையில் சீனாவில் முக­மாக பார்க்­கப்­பட்­டவர் அவர்.

இலங்­கை­யர்கள் மத்­தியில் சீனா என்­றதும் அண்­மைக்­கா­ல­மாக அவ­ரது முகமே முதலில் நினை­வுக்கு வரும் அள­வுக்கு அவர்,  நீண்­ட­காலம் இலங்­கையில் பணி­யாற்­றி­யி­ருக்­கிறார்.

அது மாத்­தி­ர­மன்றி, அவர் எல்லா மட்­டங்­க­ளிலும்  தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி, தன்னை இலங்­கை­யர்­க­ளுக்குப் பரிச்­ச­ய­மான ஒரு­வ­ராக மாற்­று­வ­திலும் வெற்றி கண்­டி­ருக்­கிறார்.

1988ஆம் ஆண்டு சீன இரா­ஜ­தந்­திர சேவையில் இணைந்து கொண்ட அவர், 61 வய­திலும் சுறு­சு­றுப்­பான இளைஞர் போல, கொழும்பில் சீனத் தூத­ர­கத்தை வழி­ந­டத்­தி­யி­ருந்தார்.

அமெ­ரிக்கா மற்றும் இந்­தி­யாவின் மறை­மு­க­மான இரா­ஜ­தந்­திரப் போரை அவர் எதிர்­கொண்ட விதம் அசா­தா­ர­ண­மா­னது.

கொரோனா நெருக்­க­டியில் முழு உல­கமும் சிக்­கி­யி­ருந்த போது, 2020 ஆம் ஆண்டு இலங்­கைக்கு தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட கீ சென்ஹொங், அன்று முதல் பத­வி­யி­லி­ருந்து விலகிச் செல்லும் வரை, கடு­மை­யான சவால்­க­ளுக்கும் மத்­தியில், சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உற­வு­களை கட்டி எழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார். 

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், வெளி­நாடு ஒன்றில் தனது தூது­வரை ஆறு ஆண்­டுகள் தொடர்ந்து பணி­யாற்ற அனு­ம­திப்­பது அரி­தான விடயம். 3 தொடக்கம் 4 ஆண்­டுகள் மாத்­தி­ரமே, ஒரு நாட்டில் தனது தூது­வரை பணி­யாற்­று­வ­தற்கு சீனா அனு­ம­திக்கும்.

அதுவும், மூலோ­பாய முக்­கி­யத்­துவம் மிக்க இடங்­களில்- மிகச் சிறப்­பாக பணி­யாற்­றிய சில தூது­வர்கள் மாத்­தி­ரமே,  5 ஆண்­டுகள் பணி­யாற்ற அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த நிலையைத் தாண்டி கீ சென்ஹொங், இலங்­கையில் 6 ஆண்­டுகள் பணி­யாற்ற அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இது ஒன்றே அவ­ரது இரா­ஜ­தந்­திரப் பணிக்­கான தகு­தியை- முக்­கி­யத்­து­வத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

அவர் இலங்­கையில் சீனாவின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக, எந்­த­ள­வுக்கு பணி­யாற்றி இருக்­கிறார் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கி­றது.

சீனத் தூதுவர்  கீ சென்ஹொங், கொழும்பில் ஷங்ரி லா விடு­தியில் கடந்த 23ஆம் திகதி,   சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு விழாவை தனது பிரி­யா­விடை நிகழ்­வா­கவும் நடத்­தி­யி­ருந்தார். அதில் உரை­யாற்­றிய போது, இலங்­கையை தனது இரண்­டா­வது தாய் நாடு எனக் குறிப்­பிட்டார். அந்­த­ள­வுக்கு அவர்  இங்கு பரிச்­ச­ய­மாக பழ­கி­யி­ருக்­கிறார்.

2000 நாட்­க­ளுக்கு மேலாக தான், இலங்­கையில் பணி­யாற்­றி­யி­ருப்­ப­தா­கவும், தனது இரா­ஜ­தந்­திரப் பணியில் நீண்­ட­கா­லத்தை இலங்­கையில் செல­விட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இலங்­கையை இரண்­டா­வது தாயகம் எனக் கூறி­யி­ருப்­பதன் மூல­மாக, இலங்­கைக்கும் தனக்கும் இடை­யி­லான நெருக்கம் எந்­த­ளவு உறு­தி­யா­னது என்­பதை அவர் சுட்டிக் காட்­டி­யி­ருக்­கிறார்.

கொவிட் தொற்றுக் காலத்தில் இலங்­கைக்கு சினோபார்ம்  தடுப்­பூ­சி­களை வழங்­கு­வ­தற்கு எடுத்த நட­வ­டிக்­கைக்கை மிக முக்­கி­ய­மா­னது.

கிட்­டத்­தட்ட 26 மில்­லியன் டோஸ் சினோபார்ம் தடுப்­பூ­சி­களை   சீனா வழங்­கி­யது.

இது இலங்­கையில் செலுத்­தப்­பட்ட மொத்த கொவிட் தடுப்­பூ­சி­களில் கிட்­டத்­தட்ட 72 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாகும்.

அதை­ய­டுத்து, பொரு­ளா­தார நெருக்­கடி காலத்தில் இலங்­கைக்குத் தேவை­யான உத­வி­களை ஒருங்­கி­ணைப்­ப­திலும்,  கடன் மறு சீர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளிலும், கீ சென்ஹொங் முக்­கி­ய­மான பங்­க­ளிப்பை செலுத்­தி­யி­ருந்தார்.

கோட்­டா­பாய ராஜபக் ஷ, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அநு­ர­கு­மார திசா­நா­யக்க என மூன்று ஜனா­தி­ப­தி­களின் பத­விக்­கா­லத்தில், அவர் இலங்­கைக்­கான தூது­வ­ராக பணி­யாற்­றி­யி­ருக்­கிறார். அவ­ரது இந்தப் பணி­களில்  சீன அர­சாங்­கத்­துக்கு முழு திருப்தி இருந்­ததால் தான் அவரால் ஆறு ஆண்­டுகள் இங்கு பணி­யாற்றக் கூடி­ய­தாக இருந்­தது.

சீனாவின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவர், பெய்­ஜிங்­கிற்கு அதிகம் தேவைப்­பட்­டி­ருக்­கிறார்.

மூலோ­பாய நலன்­களை கருத்தில் கொண்டு, சில விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம், சீனா இவ்­வா­றா­ன­வர்­களை வெளி­நா­டு­களில் தூது­வ­ராகப் பணி­யாற்­று­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருக்­கி­றது.

கீ சென்­ஹொங்­கிற்கு அந்த வாய்ப்பு வழங்­கப்­பட்­டது, அவ­ருக்­கான தனித்­து­வத்தை மாத்­திரம் காண்­பிக்­க­வில்லை, இலங்­கை­யு­ட­னான சீனாவின் உற­வு­களின் முக்­கி­யத்­து­வத்­தையும் அது தெளி­வாக காண்­பித்­தி­ருக்­கி­றது. இலங்­கை­யு­ட­னான உற­வு­களைக் கையா­ளு­வது அண்­மைக்­கா­லத்தில் அதிகம் சவா­லா­ன­தா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

இவ்­வா­றான சூழலில், அந்த உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு சாத­க­மான ஒரு­வரை உச்­ச­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு சீனா விரும்­பி­யி­ருக்­கி­றது.

சீன வெளி­யு­றவு அமைச்சின், மிக நம்­பிக்­கை­யான மற்றும் மூலோ­பாய ரீதி­யாக வலு­வான இரா­ஜ­தந்­தி­ரி­யாக அவர் கரு­தப்­பட்டார்.

இலங்­கையின் அர­சியல் தலை­வர்கள், பௌத்த மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூ­கத்­தி­ன­ருடன் மிக நெருங்­கிய உறவை இவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் மாத்­திரம் அவர் உற­வு­களை பேணி­யி­ருக்­க­வில்லை. வடக்­கிற்கு பயணம் மேற்­கொண்ட போதெல்லாம் நல்லூர் கந்தன் ஆல­யத்­திற்கும் சென்று வழி­பாடு செய்தார்.

மேற்­சட்டை அணி­யா­த­வர்கள் தான் ஆல­யத்­திற்குள் செல்ல முடியும் என்ற நல்லூர் ஆல­யத்தின் மரபைக் கண்டு அவர் பின்­வாங்­க­வில்லை.

மேற்­சட்­டையை கழட்டி விட்டு, வேட்­டி­யுடன் ஆல­யத்­திற்குள் சென்று வழி­பாடு செய்­கின்ற அள­விற்கு, அவர் கவர்ச்­சி­க­ர­மான இரா­ஜ­தந்­தி­ரி­யாக மாறி­யி­ருந்தார். இவ்­வா­றான இயல்பு, அனைத்து தரப்­பு­க­ளு­டனும் அவர் சீரான உற­வு­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு கைகொ­டுத்­தது.

இது அவர் சீனாவின் நலன்­களை இலங்­கையில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு, போது­மான தகை­மையை அவர் கொண்டு இருந்தார் என்­பதை காட்­டு­கி­றது. அதனால் தான் அவரால் ஆறு ஆண்­டுகள் வரை இலங்­கையில் பணி­யாற்றும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது இலங்­கைக்கு உத­வி­களை ஒருங்­கி­ணைப்­பதில் அவர் காட்­டிய அக்­கறை அதி­க­மா­னது.

அதிலும் கடந்த பல ஆண்­டு­க­ளாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சீரு­டை­களை வழங்­கு­வது உத­வி­களை வழங்­கு­வது போன்ற திட்­டங்­களின் ஊடாக சமூக மட்­டத்­திலும் அவர் அறி­யப்­பட்­ட­வ­ராக மாறி­யி­ருந்தார் . இலங்­கையில் இருந்து திரும்­பி­யுள்ள அவ­ருக்கு சீன வெளி­யு­றவு அமைச்சில் உயர் பதவி அல்­லது முக்­கி­ய­மான நாடொன்­றுக்­கான தூதுவர் பதவி வழங்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது. அதேவேளை, இலங்கைக்கான புதிய தூதுவரை சீனா இன்னமும் அறிவிக்கவில்லை.

ஆனால், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுபவருக்கு  கொழும்பு  இலகுவான பணியாக இருக்காது.

ஏனென்றால், உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கையை, இந்தியா, அமெரிக்கா,  ரஷ்யா என பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படிப் பலநாடுகளின் கண்காணிப்பில் இருக்கின்ற இலங்கையில்,  சீன தூதுவராக பணியாற்றுபவருக்கு கூடுதல் பொறுப்பும் அழுத்தமும் இருக்கும்.  இங்கு சீனாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் சவாலான விடயங்களை சமாளிப்பதும் இலகுவானது அல்ல.

இது பெய்ஜிங்கிற்குத் தெரியாத விடயம் அல்ல.

எனவே கொழும்புக்கு அனுப்பப்படும் அடுத்த சீனத் தூதுவர், நிச்சயமாக கீ சென்ஹொங் போன்ற ஒருவராக இருக்க வேண்டும் என்பதில் பெய்ஜிங் அதிக அக்கறை காண்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

-ஹரி­கரன்


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!