டிரான்ஸ் இசைவடிவத்திற்கு ஏற்ப பாடலின் முதல் 120 நொடிகள் ஒரு ரம்மியமான மெல்லிசைமூலம் டெம்போவை செட்செய்துவிட்டு, ஸ்வேதா மோகன் குரலில் கிளாமாக்ஸ் நோக்கி பாடலை பில்ட் செய்கிறது.
அதிலும் ஸ்வேதா மோகன் குரலில் ’முத்துமணிச்சரம் கோர்க்கணும், மாலைய சூடணும் தங்கத்துக்கு’ என இடம்பெறும் வரிகளும் அதற்குவரும் கோரஸ்ஸும் நமக்குள் அடுத்து இளையராஜா வந்து என்ன மகுடிவித்தை செய்யப்போகிறார் என்ற உணர்வை கடத்துகிறது. அதிலும் ‘மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம் ஒரு மகளாக பிறந்தவளே’ என்ற இடமும் பின்னணி இசையும் அலாதி.
ஸ்வேதா மோகன் ஒரு ரம்மியமான இசை திரளை திரட்டி இளையராஜாவிடம் கொடுக்க, வண்ணக்கிளியே என அவர் எடுக்கும் இடம் இரட்டை அலாதி. 83 வயதிலும் எப்படி இவரால் இந்த மேஜிக்கை நிகழ்த்த முடிகிறது என்ற ஆச்சரியத்தை எல்லோருக்கும் கடத்திவிடுகிறார். பின்னணியில் ஒலிக்கும் அந்த பேஸ் பீட் எல்லோருக்குள்ளும் அதிர்கிறது.
மெதுவாகத் தொடங்கி படிப்படியாக மாறும் இசை அமைப்பின் இறுதியில் ‘தனியா நான் தவிச்சு துடிக்கணுமா.. வாடி மீனாட்சி’ என முடிக்கும் இளையராஜா, நம்மை மொத்தமாக முடித்துவிடுகிறார். முத்துமணி பாடலை ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்..
இப்பாடல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவிருக்கும் டோரதி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கும் நிலையில், பாடலின் இரண்டாவது பாடலாக முத்துமணி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!