news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்றுமுதல் நெடுந்தீவில் எரிபொருள் வினியோகம்!

26 Nov, 2026
யாழ் நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல் என்பன 
இன்று(26) காலை கடற்படை கப்பலூடாக இரு பவுசர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நெடுந்தீவு பல நோ.கூ.சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பத்தத்தின் அடிப்படையில்  நெடுந்தீவு பல நோ.கூ.சங்க வளாகத்தில் அரசநிதி ஊடாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டு ஒப்பந்தகாரரால் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது
.
இந்தநிலையில் டீசல் 13200 லீற்றர், மண்ணெண்ணெய் 19800 லீற்றர், பெற்றோல் 6600 லீற்றர்  என்ற அளவுகளில் கொண்டுவரப்பட்டு நிர்மானிக்கப்பட்ட கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளது.

கடற்படையினரின் தரையிறங்கு கலத்தில் குறித்த எரிபொருட்கள் நிரப்பிய  இரு பவுசர்கள் காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. 











கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!