news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் மீது காட்டுயானை தாக்குதல்

22 May, 2026
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தூண்டில் மூலம் மீன்பிடிப்பதற்காக நேற்று (21.05.2026) காலை சைக்கிளில் சென்ற 65 வயதான முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாகக் காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார். 

ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாக மீட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!