உலகின் பெரிய ஜனநாயக நாடான கனடா இரண்டாக உடையும் அபாயம் இருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் குறைவான ஆதரவை எதிர்த்து, தனிநாடாக பிரிய வேண்டுமா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்துகிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை மையமாகக் கொண்டு பிரிவினை ஆதரிக்கும் இயக்கம் தீவிரமாக செயல்படுகிறது.
வட அமெரிக்க நாடான கனடாவில் அதிக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கொண்ட மாகாணமாக ஆல்பர்ட்டா (alberta) மாகாணம் திகழ்ந்து வருகிறது. தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கனடாவின் மத்திய வரி அமைப்பில் ஆல்பர்ட்டா மாகாணம் பில்லியன் கணக்கிலான டாலர்களை கனடாவின் மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது.
ஆனால் கனடாவின் மத்திய அரசால் மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பங்கீட்டில் ஆல்பர்ட்டாவிற்கு மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது என அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மேலும் அரசியல் அதிகாரமும் கிழக்கில் உள்ள ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை மையமாக வைத்தே இயங்குவதாகவும் நீண்ட நாள் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த சூழலில் கனடாவின் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கார்பன் வரி, சுத்தமான மாற்று எரிபொருள் கொள்கைகள் போன்றவை ஆல்பர்ட்டா மாகாணத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அம்மாகாணத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு அமைப்புகள் இணைந்து தங்கள் மாகாணத்தின் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தைச் சொந்த மாகாண வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக வேண்டும் என்றும் ஒரு இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிவினைவாதிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாக செயல்பட வேண்டுமா? கனடாவோடு இணைந்திருக்க வேண்டுமா என்பது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும் என ஆல்பர்ட்டா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வாக்கெடுப்பு வரும் 19-ம் தேதி நடைபெறும் என்றும், இதில் பெருவாரியான மக்கள் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தால் மத்திய அரசோடு அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறவேண்டும் என பிரிவினைவாதிகளும், கனடாவோடு சேர்ந்திருக்க வேண்டும் என்றும் கூறி வருபவர்களும் தீவிர பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அதே நேரம் கனடாவின் ஒரு மாகாணம் நாட்டில் இருந்து பிரிய வேண்டும் என்றால் கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் மற்றும் பெரும்பாலான பிற மாகாணங்களின் ஒப்புதலும் தேவைப்படும். ஆனால் ஜனநாயக நாடான கனடாவில் ஒரு மாகாணம் பிரிவினைக்கு ஒப்புதல் தெரிவித்தால் அதனை பிற மாகாணங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!