இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, கஹங்கம, கெடலியன்பள்ள பகுதியைச் சேர்ந்த ஹல்பாவலகே குலரத்ன என்ற 61 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொலை இடம்பெற்ற வீட்டைப் பராமரித்து வந்த காவலாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த காவலாளி நாற்காலியொன்றில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுடன், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயதுடைய நபர் ஒருவர் இக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!