மட்டக்களப்பு, கிரான் - தொப்பிவிலை வீதியில் இராணுவ ரக் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், விபத்துடன் தொடர்புடைய இராணுவ ரக் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் திகிலிவெட்டை நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய செல்லத்துரை சுரேஸ்குமார் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று காலை 8:00 மணியளவில் கிரானிலிருந்து தொப்பிவிலை நோக்கிப் பயணித்தபோது, பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள வீதி வளைவை அண்மித்த பகுதியில், தொப்பிவிலையிலிருந்து கிரான் நோக்கி வந்த இராணுவ ரக் வண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ரக் வண்டியைச் செலுத்தி வந்த இராணுவ சாரதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!