news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரு தடவை நசுக்கப்பட்டவர்கள் மூன்றாம் தடவை வென்றார்கள்!

16 Nov, 2026
இரு தடவை நசுக்கப்பட்டவர்கள் மூன்றாம் தடவை வென்றார்கள்!
ஜேவிபியின் 37ஆவது மாவீரர் தின நினைவாக...
November 13, 2026 6:37 am 0 comment

     1987 – 1989 வரையான காலப்பகுதியில் கிராமம் கிராமமாக இளைஞர்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டோர் 60,000 முதல் 80,000 வரை இருக்கலாம் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் 20,000க்கும் அதிகம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

 
தமிழர்களைப் பொறுத்தவகையில் ஜே.வி.பி.யின் பழைய நிலைப்பாடு தமிழர் மனதில் இன்னும் உறுத்துகிறது. 2006 ஜூலை 14ஆம் திகதி வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்து ஜே.வி.பி. உறுப்பினர்கள் மூன்று அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். 

ஒக்டோபர் 16ஆம் திகதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த இணைப்பைச் செல்லுபடியற்றதாக்கியது. அந்த வடுவை ஆற்றும் வழியை இன்றைய ஆட்சியே தேட வேண்டும்.

1989 நவம்பர் 12ஆம் திகதி பிற்பகல் கண்டி மாவட்டத்தின் உலப்பனையில் இருந்த செயின்ட் மேரீஸ் தோட்ட பங்களாவை இராணுவம் சுற்றிவளைத்தது. 

அத்தநாயக்க என்ற பெயரில் தோட்ட உத்தியோகத்தர் போல அங்கே தலைமறைவாக வாழ்ந்துவந்தார் ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜேவீர. முன்னர் பிடிபட்ட இரு ஜே.வி.பி முக்கியஸ்தர்களிடம் பெற்ற தகவலைக் கொண்டே படையினர் அந்த வீட்டைத் தேடி வந்திருந்தனர்.

அன்றிரவு 11.30க்கு விஜேவீர கொழும்பிலிருந்த ‘ஒப்பரேஷன் கொம்பைன்’ தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டார். படை அதிகாரிகள் நள்ளிரவு கடந்தும் அவரை விசாரித்தனர். மறுநாள் 13ஆம் திகதி அதிகாலை 3.45 மணிக்கு அவர் அக்கட்டடத்தின் கீழ்த்தளத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டார். அங்கே அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள்.


பிடிபட்ட பின்னரும் விஜேவீர அமைதியாகவே பேசினார். ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சிங்களத்தில் பதில் சொன்னார் என்று அந்த இரவு அங்கிருந்த அதிகாரிகள் பதிவு செய்திருக்கின்றனர். 

உலப்பனை பங்களாவுக்கு நிதி கேட்டு வந்த இளைஞர் குழு ஒன்று, வீட்டுக்காரர் தங்கள் தலைவர்தான் என்று அறியாமலே அவரிடம் 100 ரூபா பெற்றுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டபோது விஜேவீரவுக்கு வயது 46.

துணைப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அன்றே செய்தியாளர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒளிந்திருந்த இடத்தைக் காட்டுவதற்காக படையினரை அழைத்துச் சென்றபோது அரசியல் குழு உறுப்பினர் ஒருவர் விஜேவீரவைச் சுட்டுவிட்டாராம். பதிலுக்குப் படையினர் சுட்டதில் இருவரும் இறந்தார்களாம்.அரசியல் செய்திகள்

அவ்வாறு ரோகண விஜேவீர கொல்லப்பட்ட அந்த நவம்பர் 13 திகதியே மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இரு உடல்களும் சில மணி நேரத்துக்குள் பொரளைப் பொது மயானத்தில் எரிக்கப்பட்டன. உயிருடன் பிடிபட்டுச் சுடப்பட்டு எரிக்கப்பட்டார் என்பதையே அன்றைய செய்தி ஏடுகள் எழுதின. 

அதே நாட்களில் பொதுச் செயலாளர் உபதிஸ்ஸ கமனாயக்கவும் கொல்லப்பட்டார். ஜனாதிபதி பிரேமதாச இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த விசாரணையிலிருந்து உண்மை வெளிவரவே இல்லை.

தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் 1943 யூலை 14ஆம் திகதி பிறந்த ரோகண விஜேவீர சோவியத் ஒன்றியத்தில் கற்றவர். ரஷ்ய மொழி அவருக்கு இரண்டாவது மொழியாக வசப்பட்டிருந்தது. நாடு திரும்பிய பின் 1965மே 14ஆம் திகதி ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணியைத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில் இலவசக் கல்வியால் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகம் வரை வந்த இளைஞர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் வேலை தரவில்லை. படித்தும் வேலையின்றி ஊருக்குத் திரும்பிய அந்த இளைஞர்களை விஜேவீர கிராமம் கிராமமாகச் சென்று திரட்டினார். அவர்களுக்கு ஐந்து வகுப்புகளை நடத்தினார். அன்றைய அவலங்களும் ஏமாற்றமும் தனிப்பட்ட தோல்வி அல்ல, அந்த ஆட்சி முறையின் தோல்வி என்பதை அந்த வகுப்புகள் அவர்களுக்குப் புரியவைத்தன.

1971: முதல் கிளர்ச்சி

1970 தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணிக்காகப் பிரசாரம் செய்த ஜே.வி.பி. அந்த ஆட்சியின் மீது ஒரு வருடத்துக்குள் நம்பிக்கை இழந்தது. 1971 மார்ச்சில் விஜேவீர உட்பட 4,000 பேர் சந்தேகத்தில் கைதானார்கள். சிறையிலிருந்த தலைவரை விடுவிக்க மாணவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் திட்டமிட்டபடி 1971 ஏப்ரல் 5ஆம் திகதி இரவு நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள் தொடங்கின.தேர்தல் செய்திகள்

சில வாரங்களில் கிளர்ச்சி நசுக்கப்பட்டது. அரசு சொன்ன இறப்பு 1,200. சுயாதீன மதிப்பீடுகள் 4,000 முதல் 5,000 வரை எனத தெரிவித்தன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற இளைஞர்கள். ஈற்றில் விஜேவீர குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன் நிறுத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சிறையிலிருந்து வாக்குச் சீட்டுக்கு

1977இல் ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கம் விஜேவீரவையும் தோழர்களையும் விடுதலை செய்தது. 1978இல் ஹவானாவில் நடந்த கம்யூனிச இளைஞர் மாநாட்டில் ஜே.வி.பி. முதன்முறையாக வெளிநாட்டில் ஒரு கட்சியாகப் பங்கேற்றது.

1982 அக்டோபர் 20ஆம் திகதி நடந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் விஜேவீரவும் போட்டியிட்டார். அந்தப் பிரசாரத்தில் அவரது பேச்சுகளால் பல இளைஞர்களும் கவரப்பட்டார்கள். அத்தேர்தலில் 273,428 வாக்குகளுடன் (4.19 வீதம்) மூன்றாம் இடத்தைப் பிடித்தார். பழைய இடதுசாரிகளின் தலைவர் கொல்வின் ஆர். டி சில்வாவுக்குக் கிடைத்ததோ 58,531 வாக்குகள் மட்டுமே.


ஆனால் 1983 ஜூலையில் தமிழர் மீது நடத்தப்பட்ட இனக்கலவரத்தின் பழியை ஜெயவர்தன அரசு வேறு சில இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்த்து ஜே.வி.பி. மீதும் சுமத்தித் தடை செய்தது. கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் யார் என்பது தமிழர் அனைவருக்கும் தெரியும். அந்தப் பழியை இடதுசாரிகள் மீது போடுவதே ஆட்சியாளரின் தந்திரம். அத் தடையுடன் ஜே.வி.பி. தலைமறைவானது.நாட்காட்டி பெறுக

1987-89: இரண்டாம் தடவை

1987 ஜூலை 29ஆம் திகதி இந்திய_ இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஜே.வி.பி. அதைத் தாய்நாட்டின் இறைமைக்கு எதிரானது என்று கூறி ஆயுதம் ஏந்தியது. அதன் இராணுவப் பிரிவான தேசப்பிரேமி ஜனதா வியாபாரய தெற்கெங்கும் தாக்குதல்களை நடத்தியது. 

அரசோ தன் படைகளுடன் கொலைக் குழுக்களையும் இறக்கியது. கிராமம் கிராமமாக இளைஞர்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டோர் 60,000 முதல் 80,000 வரை இருக்கலாம் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் 20,000க்கும் அதிகம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

தமிழர்களைப் பொறுத்தவகையில் ஜே.வி.பி.யின் பழைய நிலைப்பாடு தமிழர் மனதில் இன்னும் உறுத்துகிறது. 2006 ஜூலை 14ஆம் திகதி வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்து ஜே.வி.பி. உறுப்பினர்கள் மூன்று அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஒக்டோபர் 16ஆம் திகதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த இணைப்பைச் செல்லுபடியற்றதாக்கியது. அந்த வடுவை ஆற்றும் வழியை இன்றைய ஆட்சியே தேட வேண்டும்.


மாவீரர தின நினைவுகள்

ஜே.வி.பி. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 13ஆம் திகதியை ‘இல் மகா விரு சமருவ’ என்ற பெயரில் நினைவுகூர்கிறது. இரு கிளர்ச்சிகளிலும் கொல்லப்பட்ட பல்லாயிரம் தோழர்கள் அந்த நாளில் நினைவுகூரப்படுகின்றனர். 
ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து உருவான பெரட்டுகாமி சோசலிசக் கட்சி நுகேகொடை தெல்கந்த நகரில் தனியாக நினைவு நிகழ்வை நடத்துகிறது. 2024இல் இந்த நினைவு நாளுக்கு அடுத்த நாளே பொதுத் தேர்தல் நடந்தது.நாட்காட்டி பெறுக

கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி 36ஆவது நினைவு நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடந்தது. தலைவரைச் சுட்டு எரித்த அதே அரசின் உச்சப் பதவியிலிருந்து, அந்தக் கட்சியின் தலைவரே தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று 37ஆவது நினைவு நாளையும் அந்தக் கட்சி ஆளும் கட்சியாக நினைவுகூருகிறது.

வாக்குச் சீட்டில் மீண்ட கனவு

2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க 42.3 வீத வாக்குகளுடன் வென்றார். அப்போது தேசிய மக்கள் சக்திக்குப் பாராளுமன்றத்தில் இருந்தவை மூன்றே ஆசனங்கள். அந்த நிலையில் அவர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

இரண்டு மாதங்களுக்குள் மக்கள் தந்த பதில் அதைவிடப் பெரிதாக இருந்தது. 2024 நவம்பர் 14ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி 225 ஆசனங்களில் 159ஐக் கைப்பற்றியது. அவற்றில் 141 தேர்தல் மாவட்டங்களிலும் 18 தேசியப் பட்டியலிலும் கிடைத்தவை. 61.56 வீத வாக்குகளும் 6,863,186 வாக்குகளும் பொதுத் தேர்தல் வரலாற்றில் எந்தத் தனிக் கட்சிக்கும் கிடைக்காத உச்சம். விகிதாசார முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு கட்சி பெற்றதும் அன்றுதான் முதன்முறை. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களை மட்டுமே பெற்றது.நாட்காட்டி பெறுக


யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,000க்கும் அதிகமான வாக்குகளுடன் முதலிடம் பெற்றது. தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்தவை 63,000க்குச் சற்றே கூடுதலான வாக்குகள். அந்த மாவட்டத்தின் மூன்று ஆசனங்களும் அவர்களுக்கே போயின. 

சுதந்திரத்துக்குப் பின் தென்னிலங்கையின் ஒரு கட்சி யாழ்ப்பாணத்தில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் தடவை. பல தசாப்தங்களாகத் தமிழ்த் தலைமைகள் தந்த வெற்று வாக்குறுதிகளால் களைத்துப்போன மக்கள் புதிய முகங்களை நாடியதையும் அந்த எண்ணிக்கை காட்டுகிறது.

ரோகண விஜேவீர எரிக்கப்பட்டு 35 ஆண்டுகள் கழித்து, அவர் உருவாக்கிய இயக்கத்தின் வாரிசுகள் எந்த அரசு இயந்திரம் தம்மை இருமுறை நசுக்கியதோ அதன் தலைமைப் பீடத்தில் வாக்குச் சீட்டின் வழியாக அமர்ந்திருக்கிறார்கள். துப்பாக்கியால் எட்ட முடியாத இடத்தை ஜனநாயகம் அவர்களுக்குத் திறந்து கொடுத்தது.

இன்னும் போக வேண்டிய தூரம்

கடந்த நான்கு ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் 25.9 வீதமாக உயர்ந்திருந்த நாட்டிலேயே இந்த ஆட்சி தொடங்கியது. ஊழலை ஒழிப்பது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளை மீட்பது, உற்பத்திப் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவது என வாக்காளருக்குத் தந்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக நீதிக்கும் பொருளாதார உறுதிப்பாட்டுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதும் அத்துடன் சேர்ந்தே உள்ளது.

2022 ஏப்ரலில் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாது என்று இலங்கை அறிவித்திருந்தது. அந்தச் சரிவுக்குப் பின்னரே நாட்டின் பொருளாதாரச் சுயாதீனம் பற்றிய ஜே.வி.பி.யின் பலமான அரசியல் வாதம் தெற்கின் பொது உரையாடலில் இடம்பிடித்தது. இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் அதே சரிவுடன் புதிய வடிவம் எடுத்தது. அவர்களை ஆட்சியின் பங்காளிகளாக வைத்திருப்பதே தேசிய மக்கள் சக்திக்கு முன்னுள்ள பெரும் பணி.தீவுகள் ஆராயுங்கள்


அரச சேவையில் வெளிப்படைத்தன்மையும் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான நீதியும் வெறும் அறிவிப்புகளாக இருக்கக் கூடாது. கொள்கைகளின் பலனை வாங்கிக்கொள்ளும் பார்வையாளராக மக்கள் இருப்பதற்கும், அவற்றின் திசையைத் தீர்மானித்துக் கண்காணிக்கும் பங்காளியாக இருப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. ஜே.வி.பி. தன் தோழர்களைப் பழக்கியது இரண்டாவது வகை அரசியலுக்குத்தான். ஆளும் கட்சியாக மாறிய பின்னரும் அந்தப் பங்கேற்பு அரசியலைக் காப்பாற்றுவதே அதன் முதல் பரீட்சை.

தெற்கில் 20,000க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதி கேட்கும் அதே குரல், வடக்குக், கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கும் நீதி கேட்க வேண்டும். வடக்குக் கிழக்கு இணைப்பை 2006இல் எதிர்த்த கட்சியின் வாரிசுகளுக்கே இன்று அங்குள்ள மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை உறுதியாக வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு, நிலம், காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற சர்ச்சைகளுக்கு விடை கிடைக்க வேண்டும்.அரசியல் செய்திகள்

1971இலும் 1989இலும் இறந்த தோழர்களில் பெரும்பாலோர் வறிய கிராமங்களிலிருந்து வந்த இளைஞர்களும் யுவதிகளுமே. தலைவரைக் கைது செய்த 24 மணி நேரத்துக்குள் சுட்டு எரித்தவர்கள் யார், அதற்கு உத்தரவிட்டவர் யார் என்ற கேள்விகளுக்கு இன்னும் முழுமையான விடை இல்லை. அவர்கள் இரவோடு இரவாக எரித்த உடல்களுக்கு இந்த அரசாங்கம் இன்னும் ஒரு பதிலைத் தரக் கடன்பட்டிருக்கிறது. அது நீதி.

விடுதலை, சமத்துவம், ஜனநாயகம் சகோதரத்துவம் என்பவற்றுக்காக விலைகொடுக்கப்பட்ட உயிர்களின் நினைவாக இந்த நாளை நினைவுகூருவோம்.

என். சரவணன்…

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!