உலக அரங்கில் இலங்கை தமிழரின் பெருமை! 10 ஆண்டுகளின் பின் இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை இயக்கிய பிரதீப் விமல்ராஜ்!
பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அதன் முதல் விமானத்தை இயக்கிய விமானிகளுள் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்தமிழரான சிரேஷ்ட விமானி பிரதீப் விமல்ராஜும் இடம்பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது சிறுவயதைக் கழித்த பிரதீப் விமல்ராஜ், பிரிட்டிஷ் எயார்வேஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விமானப் பயணத்தில் பங்கெடுத்துள்ளமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்குத் திரும்பிய பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தின் பயணத்தில் பங்கெடுத்தமை தனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம் என பிரதீப் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தனது தாயகத்துடனான தொடர்பையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமானப் பயணத்தில் பங்கேற்றதன் மகிழ்ச்சியையும் பெருமையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்..
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!