news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையின் மருத்துவச் சேவையை வியந்து பாராட்டும் வெளிநாட்டுப் பெண்!!

28 Oct, 2026
ஐரோப்பிய நாடுகளை விட இலங்கையின் சுகாதார சேவை மிகவும் சிறப்பான முறையில் உள்ளதாக சுற்றுலா பெண் பயணி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர் இலங்கையின் மருத்துவச் சேவையை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஒரு நாள் காலை கடுமையான காய்ச்சல், இருமல் மற்றும் தலைசுற்றல் போன்ற அசௌகரியங்களால் அவதிப்பட்டேன். எனது வெளிநாட்டு நண்பரின் உதவியுடன் சிகிச்சை பெறுவதற்காக மாத்தறை மாவட்ட கூட்டுறவு வைத்தியசாலைக்குச் சென்றேன்.

மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் பொது மருத்துவர் ஒருவரை சந்திப்பதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையில் இலங்கையின் மருத்துவமனையிலிருந்து கிடைத்த அனுபவம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் பதிவு செய்தல், இரத்த அழுத்தத்தை பரிசோதித்தல் என எந்தவொரு நீண்ட வரிசையிலும் காத்திருக்காமல் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மருத்துவர் என்னை மிகவும் கனிவுடன் பரிசோதித்து அவசியமான மருந்துகளைப் பரிந்துரைத்தார். அத்துடன், மூன்று நாட்களுக்குள் உடல்நிலை குணமடையாவிட்டால் மீண்டும் வருமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் இவ்வாறான அவசர சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் அல்லது சில வேளைகளில் முழு நாளையும் செலவிட நேரிடும். இலங்கையின் சுகாதாரச் சேவையின் இந்தத் துரிதத் தன்மையைக் கண்டு ஆச்சரியமாக உள்ளது.

அத்துடன் மருத்துவ ஆலோசனை மற்றும் அவசியமான அனைத்து மருந்துகளுக்கும் 5,000 ரூபாவுக்கும் குறைவான மிகக் குறைந்த தொகையே செலுத்த வேண்டியிருந்ததாக அவர் வியப்படைத்துள்ளார். கடந்த வருடம் மிரிஸ்ஸ பகுதியில் மருத்துவச் சிகிச்சைக்காக 70 டொலர் வரையான தொகையைச் செலவிட நேரிட்டது.

எனினும், இம்முறை மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையிலிருந்து கிடைத்த சேவையால் பணத்திலும் நேரத்திலும் பாரிய மீதம் ஏற்பட்டதாக ரஷ்ய பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!