news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

10 Sep, 2026
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப நிகழ்வு இன்று (10) கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்றது.

இது குறித்து அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிக்கையில்,


'ஓஷன் வாயேஜர் இன்டர்நேஷனல்' (Ocean Voyager International) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பல், நாட்டின் கடற்படை உற்பத்தித் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்த உள்ளூர் உற்பத்திப் பொருளாதாரத்தை, நடைமுறை வெற்றியாக மாற்றுவதே எமது முக்கிய பொறுப்பாகும்.

உலகின் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளின் மையத்தில் அமைந்துள்ள எமது நாட்டிற்கு, குறுகிய காலத்தில் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய முதன்மைத் துறையாக படகு மற்றும் கப்பல் கட்டும் தொழிலை நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். எமது திறமையான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புடன், இலங்கையை இப் பிராந்தியத்தின் கடற்படை உற்பத்தி மையமாக (Naval Manufacturing Hub) மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும், அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் நாம் வழங்கி வருகின்றோம்.

இந்நிகழ்வில் SLYG குழுமத்தின் தலைவர் பியர் பிரிங்கியர்ஸ் (Pierre Pringiers), நிறுவன  பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டுச் சபையின் (BOI) அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!