அமெரிக்க டொலருக்கு நிகரான உள்நாட்டு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் நேரடித் தாக்கம் காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் எனத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் நாணய மாற்று விகித மாறுபாடுகள் காரணமாக, அலைபேசிகளின் விலைகளைத் திருத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மிக விரைவில் உள்நாட்டுச் சந்தையிலுள்ள அலைபேசிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உதிரிப்பாகங்களின் தற்போதைய விலைகள் 20 முதல் 25 வீதம் வரையில் உயர்வடையக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரிப்பால் ஏற்படும் இந்த விலை உயர்வு, ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி இறக்குமதியாகும் ஏனைய அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களின் விலைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!