news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையும் நெருக்கடியில் சிக்குமா?

14 Jul, 2026

மத்­திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றம் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் கடந்த மாதம் செய்து கொள்­ளப்­பட்ட போர்­நி­றுத்த உடன்­பாடு முடி­வுக்கு வந்து விட்­ட­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அறி­வித்­துள்ளார்.

முன்­ன­தாக, திங்கள் மற்றும் செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் ஹோர்முஸ் நீரி­ணையில் பயணம் செய்த, சில வணிகக் கப்­பல்கள் தாக்­கப்­பட்­டதை அடுத்து, ஈரான் மீது அமெ­ரிக்கா தாக்­கு­தல்­களை தொடங்­கி­யி­ருந்­தது.

ஈரானே அந்த தாக்­கு­தல்­க­ளுக்கு பொறுப்பு என அமெ­ரிக்கா கூறு­கி­றது.

ஆனால், அமெ­ரிக்­காவே இந்த தாக்­கு­தல்­க­ளுக்குப் பொறுப்பு என்­கி­றது ஈரான்.


போர்­நி­றுத்­தத்தை முறித்துக் கொண்டு மீண்டும் ஈரான் மீது அமெ­ரிக்கா தாக்­கு­தலை நடத்த, ஈரானும் பதில் தாக்­கு­தல்­களில் இறங்க, மத்­திய கிழக்கில் மீண்டும் நிச்­ச­ய­மற்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

மத்­திய கிழக்கில் ஏற்­படும் எந்­த­வொரு பதற்ற நிலையும், சர்­வ­தேச சந்­தையில்  எண்ணெய் விலையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது வழக்கம்.

ஹோர்முஸ் நீரி­ணையை கட்­டுப்­ப­டுத்தும் ஈரான் மீதான தாக்­கு­தல்­களை அடுத்து, மீண்டும் எண்ணெய் விலைகள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில்,  இந்த போர் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் பாது­காப்பு ரீதி­யா­கவும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தக் கூடி­யது.

மத்­திய கிழக்குப் போரின் விளை­வு­களை இலங்கை ஏற்­க­னவே எதிர்­கொண்டு வரு­கின்ற சூழலில், மீண்டும் தொடங்­கி­யுள்ள போர், இன்னும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.Geographic Reference

சர்­வ­தேச சந்­தையில் ஏற்­பட்ட எரி­பொருள் நெருக்­க­டியை அடுத்து, அவ­ச­ர­மாக  இலங்கை அர­சாங்கம், கூடுதல் விலைக்கு எரி­பொ­ருளை கொள்­வ­னவு செய்­தி­ருந்­தது.

இதனால்,  சர்­வ­தேச சந்­தையில் எரி­பொருள் விலைகள் குறைந்த போதும்,அதற்கு இணை­யாக விலையைக் குறைக்க கூடிய நிலை இருக்­க­வில்லை.

20, 25  ரூபா  மாத்­தி­ரமே பெற்றோல், டீசல் விலைகள் குறைக்­கப்­பட்­டன.

தற்­போது மீண்டும் போர் தொடங்­கி­யுள்­ளதால், சர்­வ­தேச சந்­தையில் எரி­பொருள் விலைகள் உயர்ந்­துள்­ளதால், அர­சாங்கம் அடுத்து வரும் நாட்­களில் எரி­பொருள் விலை­களை அதி­க­ரிக்கக் கூடிய சாத்­தி­யங்கள் உள்­ளன.

உள்­நாட்டில் எரி­பொருள் விலைகள் அதி­க­ரிப்­பது பொரு­ளா­தார ரீதி­யாக மாத்­திரம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது.

பாது­காப்பு ரீதி­யா­கவும் அதன் தாக்கம் எதி­ரொ­லிக்கும்.

ஏனென்றால் இலங்­கையின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு கணி­ச­மான எரி­பொ­ருளை செல­விட வேண்­டிய சூழல் அர­சாங்­கத்­திற்கு இருக்­கி­றது.

இலங்­கையின் பரப்­ப­ளவை விட மூன்று மடங்கு பெரிய கடற்­ப­ரப்பை கண்­கா­ணிக்க வேண்­டிய பொறுப்பு கடற்­படை, கட­லோரக் காவல்­படை மற்றும் விமா­னப்­ப­டை­க­ளுக்கு உள்­ளது.


இலங்கை, பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருந்­த­போது, டீசல் பற்­றாக்­கு­றை­யினால் இலங்கை கடற்­ப­டையின் போர்க்­கப்­பல்கள் ரோந்துப் பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் முடங்­கு­கின்ற சூழல் ஏற்­பட்­டது.

அந்தச் சந்­தர்ப்­பத்தில் இந்­தி­யாவின் ஊடாக அவுஸ்­தி­ரே­லியா, இலங்கை கடற்­ப­டைக்கு 450 மெற்றிக் தொன்  டீச­லையும் விமா­னப்­ப­டைக்கு, 27 ஆயிரம் லீற்றர் எரி­பொ­ரு­ளையும் வழங்­கி­யது.

இலங்கை கடற்­ப­டையின் கண்­கா­ணிப்புத் திறன் குறையும் போது, அது அவுஸ்­ரே­லி­யாவின் பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தும்.

ஏனென்றால், இலங்­கையில் இருந்து அக­திகள் பட­குகள் அவுஸ்தி­ரே­லி­யா­வுக்கு செல்லக் கூடிய சாத்­தி­யங்கள் இருந்­தன. கடந்த காலத்தில் இவ்­வா­றான ஆட்­க­டத்­தல்கள் அதி­க­ளவில் இடம்­பெற்­றி­ருந்­தன.

அதனை முறி­ய­டிப்­ப­தற்கு, - தடுப்­ப­தற்கு இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்து  பணி­யாற்ற வேண்­டிய நிலை அவுஸ்தி­ரே­லி­யா­விற்கு ஏற்­பட்­டது.

ஒரு கட்­டத்தில் அவுஸ்தி­ரே­லியாவுக்கு மனித உரிமை கரி­ச­னைகள் அனைத்­தையும் புறந்­தள்ளி விட்டு, இலங்கைப் படை­க­ளையும் அர­சாங்­கத்­தையும் ஆத­ரிக்க வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டது.

அவுஸ்தி­ரே­லியா, தனது பிரச்­சி­னையில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு, இலங்கை கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டைக்கு, கப்­பல்கள், விமா­னங்கள் மற்றும் ஏனைய வச­தி­களை செய்து கொடுக்­கி­றது.

அண்­மையில் கூட அவுஸ்தி­ரே­லியா,  12 ட்ரோன்­களை விமா­னப்­ப­டைக்கு கொடை­யாக வழங்­கி­யது.

அவை கரை­யோரப் பகு­தி­களில் கண்­கா­ணிப்­பு­களை தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இலங்­கையில் இருந்து  பல நாள் மீன்­பிடிப் பட­கு­களில் அக­திகள் அவுஸ்தி­ரே­லியா நோக்கி படை­யெ­டுத்த காலம் இருந்­தது.

அவ்­வா­றான நிலை மீண்டும் ஏற்­ப­டாது தடுப்­ப­தற்­கா­கவே, 4200  ஆழ்­கடல் மீன்­பிடிப்பட­கு­க­ளுக்கு, சொந்தச் செலவில்,  வி.எம்.எஸ். எனப்­ப­டு­கின்ற, கடற்­க­லங்­களை கண்­கா­ணிக்கும் கரு­வி­களை பொருத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது.


இது இலங்­கையின் பாது­காப்­புக்­கா­கவோ, மீன­வர்­களின் பாது­காப்­புக்­கா­கவோ  கொடுக்­கப்­பட்­டது அல்ல. அவுஸ்தி­ரே­லியா தனது பாது­காப்­புக்­கா­கவே இவற்றைக் கொடுத்­தது. இதனை இலங்கை தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்­­கி­றது.

இலங்கை கடற்­படை மற்றும் விமா­னப்­படை என்­பன பயன்­ப­டுத்தும் கலங்கள்,  இலங்­கையின் பாது­காப்பை உறுதி செய்து கொள்­வ­தற்­காக மாத்­திரம் இயங்­க­வில்லை.

வேறு பல நாடு­களின் பாது­காப்பு தேவை­க­ளுக்­கா­கவும் அவற்றை ஈடு­ப­டுத்­து­கின்ற நிலை உள்­ளது.

தெரிந்தோ தெரி­யா­மலோ உதவ வேண்­டிய நிலை காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான சூழலில், மத்­திய கிழக்குப் போர் தீவி­ர­ம­டை­வது, பொரு­ளா­தார ரீதி­யாக இலங்கை படை­களின் கண்­கா­ணிப்பு திறனை - பாது­காப்பு திறனை பல­வீ­னப்­ப­டுத்தும். இந்த போர் இடை­நி­றுத்­தப்­பட்­ட­போது, ஈரா­னிய உயர் தலைவர் மொஜ்­தபா கமெனி ஒரு எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார்.Geographic Reference

மீண்டும் அமெ­ரிக்கா போரை தொடங்­கினால்,  நாங்கள் மத்­திய கிழக்கில் உள்ள அமெ­ரிக்க நிலை­களை மாத்­திரம் தாக்­க­மாட்டோம், அரபிக் கடலில், செங்­க­டலில், இந்­திய பெருங்­க­டலில் உள்ள அமெ­ரிக்க நிலை­களை எல்­லா­வற்­றையும் தாக்­குவோம் என அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

ஏற்­கெ­னவே, அமெ­ரிக்கா இந்­திய பெருங்­க­ட­லுக்குப் போரை கொண்டு வந்து விட்­டது.

காலி துறை­மு­கத்­துக்கு அப்பால் ஈரா­னிய போர்க்­கப்பல் கடந்த மார்ச் மாதம் தாக்­கப்­பட்ட சம்­பவம், ஈரா­னுக்கு பெரும் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அந்த கப்பல் மீது அமெ­ரிக்கா திட்­ட­மிட்டு தாக்­குதல் நடத்­தி­ய­தாக அது கரு­து­கி­றது.

இலங்கை அர­சாங்கம் அந்த மாலு­மி­களை பாது­காத்­தி­ருந்­தாலும், அவர்­களை உட­ன­டி­யாக திருப்பி அனுப்­பா­தமை ஈரா­னுக்கு எரிச்­ச­லூட்­டி­யது.

இலங்கை கடற்­ப­டை­யிடம் தஞ்­ச­ம­டைந்த ஈரா­னிய கப்­ப­லான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர் இன்­னமும் கூட திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் தரித்து நிற்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் அண்­மையில் கொழும்பு வந்­தி­ருந்த, தெற்கு, மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­திற்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் போல் கபூ­ரிடம், சர்­வ­தேச அள­வி­லான பிரச்­சி­னை­களில் இலங்கை நடு­நி­லை­யுடன் செயற்­படும் என வாக்­கு­றுதி அளிக்கப்பட்டது.

மத்­திய கிழக்கு போரின் போது, இலங்கை அமெ­ரிக்­காவின் பக்கம் சார்ந்தே பெரு­ம­ளவில் செயற்பட்டு வந்­தது.

ஆனாலும், மத்­தள விமான நிலை­யத்தில் அமெ­ரிக்க போர் விமா­னங்கள் தரை­யி­றங்க அனு­மதி அளிக்­க­வில்லை என்று அர­சாங்கம் ஒரு நடு­நிலை விம்­பத்தை உரு­வாக்க முயன்­றது.

ஆனாலும் அதன் செயற்­பா­டுகள் அமெ­ரிக்­காவை சார்ந்­த­தா­கவே இருந்­தது.

இந்த நிலையில் மீண்டும் மத்­திய கிழக்கில் தொடங்­கி­யுள்ள போர்,  எண்ணெய் விலை உயர்வு போன்ற பொரு­ளா­தார நெருக்­க­டி­களை இலங்­கைக்கு ஏற்­ப­டுத்தப் போகின்ற அதே­வேளை, இந்தப் போர் இந்­திய பெருங்­க­ட­லுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்டால் இலங்­கையும் அதனால்  நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மான பாதிக்­கப்­படும் நிலை ஏற்­ப­டலாம்.

இலங்­கைக்கு அண்­மையில் உள்ள கடற்­ப­குதி அமை­தி­யற்­ற­தாக மாறலாம்.

அது இலங்­கையை கடந்து செல்லும் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்­பற்ற நிலையை உரு­வாக்கும்.

கொழும்பு துறை­முகம் நோக்கி வரு­கின்ற கப்­பல்­களில் எண்­ணிக்­கையை கூட அது பாதிக்கக் கூடும்.

இலங்­கையை அண்­டிய கப்பல் பாதையில் இருந்து விலகி கப்­பல்கள் செல்லும் நிலையும் ஏற்­ப­டலாம்.

மத்­திய கிழக்குப் போர் தொடங்­கிய கால­கட்­டத்தில், கொழும்புத் துறை­மு­கத்­திற்கு அதி­க­ளவு கப்­பல்கள் வரும் நிலை காணப்­பட்­டது.

அது  துறை­மு­கத்தின் வரு­மானம் அதி­க­ரிக்­கவும் கார­ண­மாக இருந்­தது.

ஆனால், இந்த நிலை தொடரும் என்று கூற முடி­யாது.

ஏனென்றால், மத்­திய கிழக்குப் போர்  வரும் காலத்தில் எப்­படித் தொட­ரப்­போ­கி­றது என யாராலும் கணிக்க முடி­யாத நிலை உள்­ளது.

தன்­னிடம் யாரும் கணிக்க முடி­யாத ஆயுதங்கள் இருப்பதாக ஈரான் கூறுகிறது.

அதனை அது எப்போது, எப்படி பயன்படுத்தும் என்று தெரியாது.

சில வேளைகளில் ஈரான் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில்,  தன் ஆயுத பலத்தை வெளிக்காட்ட முற்பட்டால், இலங்கைக்கு அருகில் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை தோன்றும்.

இவ்வாறான நிலை இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ - பிராந்திய பாதுகாப்பில் தாக்கத்தை உண்டு பண்ணும்.

இத்தகைய தாக்கங்கள் ஏற்படுவது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பு சூழலுக்கும் நிச்சயம் சவாலானதாகவே இருக்கும்.

ஈரான் –- அமெரிக்கா என்ற இரண்டு நட்பு சக்திகளுக்கு இடையில் தெளிவான ஒரு எல்லைக்கோட்டை பிரிக்க முடியாமல், ஏற்கெனவே இலங்கை தடுமாறும் நிலை ஏற்பட்டது.Geographic Reference

எதிர்காலத்திலும் அவ்வாறான நிலை ஏற்படலாம்.

அது இலங்கையை மேலும்இக்கட்டான நிலை மைகளுக்குள் சிக்க வைக்கக் கூடும்.

சுபத்ரா


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!