news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இளையராஜா காப்பி அடித்த பாடல்கள், இவர் பாட்டு தான் அதிகம்; மேடை பேச்சில் உண்மை உடைத்த கங்கை அமரன்

05 Aug, 2026
இளையராஜா காப்பி அடித்த பாடல்கள், இவர் பாட்டு தான் அதிகம்; மேடை பேச்சில் உண்மை உடைத்த கங்கை அமரன்

நாங்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தோம். எம்.எஸ்.வி அவர்களை பின்பற்றி தான் நாங்கள் வந்தோம்.


தமிழ் சினிமாவில், இசையில் பல சாதனைகளை படைத்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, பல பாடல்களை காப்பி அடித்துள்ளதாகவும், அதை அவரே சொன்னால் தான் சரியாக இருக்கும், நான் சொன்னால் சரியாக இருக்காது என்றும் கங்கை அமரன் பழைய நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் கங்கை அமரன். இயக்குனர் பாக்யராஜூவின் ஆரம்பக்கால படங்களுக்கு இசையமைத்த இவர், தன் அண்ணன் இளையராஜாவின் இசையில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், நேர்காணல்களில் திரைத்துறை ஜாம்பவான்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார். 

இந்த வகையில் பழைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கை அமரன், நாங்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தோம். எம்.எஸ்.வி அவர்களை பின்பற்றி தான் நாங்கள் வந்தோம். நிறைய பாடல்களை உதாரணமாக சொல்லலாம். எந்த பாடலை நான் இளையராஜா எல்லாம் காப்பி அடித்தோம் என்று நான் சொல்ல கூடாது. அதை இளையராஜா தான் சொல்ல வேண்டும். நான் சொன்னால் அவருக்கு இழுக்கு.



எந்த பாடலை காப்பி அடித்தேன் என்பதை அவர் தான் சொல்ல, வேண்டும். நான் காப்பி அடித்திருக்கிறேன். எனக்கு ஒரு படம் வந்தது, வழக்கமாக வரும் காட்சி ஒன்றுக்கு பாடல் கேட்டார்கள். காதலன் இந்த பக்கம், காதலி அந்த பக்கம் இருவரும் பார்க்க முடியவில்லை.இதற்கு ஒரு பாடல் வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு படகோட்டி படத்தில் வரும் பாட்டுக்கு பட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ என்ற பாடலையும் உதாரணமாக சொல்லி கேட்டார்கள். 

இதை கேட்ட நான் அதற்கு என்ன அதையே போட்டால் போச்சு என்று சொல்லி, பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடலை போட்டேன். இவ்வளவு தான். நான் சொல்வது என்றால் நிறைய பாடல்களை சொல்லலாம். நான் நிறைய காப்பி அடித்திருக்கிறேன். இளையராஜாவிடம் இருந்தும் நான் நிறைய எடுத்திருக்கிறேன். மௌன கீதங்கள் படத்தில், இளையராஜா ஒரு பக்கம் இசை கண்டெக்ட் பண்ணுவார் அவரிடம் இருந்து பேப்பரை திருடி வந்து நான் கண்டெக்ட் பண்ணுவேன் அப்போது இசை கங்கை அமரன் என்று போடுவார். 

இதுதான் நடந்தது இளையராஜாவுடன் உதவியாளராக இருந்து ஹிட்டார் வாசிக்கும்போது இந்த ஆளிடம் நிறைய டியூன் இருக்கும். இளையராஜா வேண்டாம் என்று ஒதுக்குகிற டியூன் எல்லாம் இவர் தான் வைத்திருப்பார் என்றும் இவரை புக் செய்தால் இளையராஜா மாதிரி இசை வரும் என்று நினைத்து புக் செய்தார்கள். 

ஆனால் நான் வேற டைப்பில் மியூசிக் போட்டேன். இந்த மாதிரி வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். ன் அப்போது இசை கங்கை அமரன் என்று போடுவார். 

இதுதான் நடந்தது இளையராஜாவுடன் உதவியாளராக இருந்து ஹிட்டார் வாசிக்கும்போது இந்த ஆளிடம் நிறைய டியூன் இருக்கும். இளையராஜா வேண்டாம் என்று ஒதுக்குகிற டியூன் எல்லாம் இவர் தான் வைத்திருப்பார் என்றும் இவரை புக் செய்தால் இளையராஜா மாதிரி இசை வரும் என்று நினைத்து புக் செய்தார்கள். 

ஆனால் நான் வேற டைப்பில் மியூசிக் போட்டேன். இந்த மாதிரி வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார்."" }

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!