அண்மையில் முடிவுற்ற இஸ்ரேலிய தேர்தல்களுக்குப் பின்னர், இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில், ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பணியை காடி ஐசன்கொட்டிடம் அதிகாரப் பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
இவர் ஒன்றும் சமாதானத்தை நேசிக்கும் மனிதர் அல்லர். எனவே, பலஸ்தீன மக்களுக்கு எதிரான காட்டுமிராண்டி நடவடிக்கைகள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமராக நெத்தன்யாஹுவோ ஐசென்கொட்டோ யார் வந்தாலும் அது எந்தவிதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
நெத்தன்யாஹுவோ அல்லது ஐசென்கொட்டா என்பதல்ல, இங்கு முக்கியம். காரணம் சியோனிச யூத சக்திகளின் சதித்திட்டங்கள் அமெரிக்க-பிரிட்டன்-ஐரோப்பா மற்றும் ரஷ்யாவால் ஆதரிக்கப்படுகின்றன.
முஸ்லிம் மத்திய கிழக்கை சீர்குலைக்க, மனித வர்க்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா விதிமுறைகள், சட்டங்கள் மற்றும் மனித கண்ணியத்தை மீறி, இந்த காட்டுமிராண்டித்தனமான நிறுவனத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான்.
ஊழல் நிறைந்த மற்றும் ஒடுக்கு முறையான அரபு சர்வாதிகாரிகள், தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக துரோகம் இழைத்து, தங்கள் சுய அரசியல் இருப்புக்காக இஸ்ரேலின் ஆதரவாளர்களான அதே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எஜமான்களை நம்பியிருப்பதால், காலாகாலமாக இடம்பெற்று வரும் மேற்குலகின் இந்த குற்றங்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஐசன்கொட்டின் தலைமையின் கீழும், இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனம் தொடர வாய்ப்புள்ளது என்பதையே, இதுவரை தொடர்ந்து அவதானிக்கப்பட்ட, எல்லா அறிகுறிகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில், அவர் பிரதிநிதித்துவம் செய்வதும் சியோனிஸ்டுகளை தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சியோனிசத்தின் பிரதான நிகழ்ச்சி நிரல் மத்திய கிழக்கை ஆட்சி செய்வதும் சூறையாடுவதும் அகண்ட இஸ்ரேலை நிறுவுவதுமாகும். உதாரணமாக, கிடைக்கப் பெறும் சில அறிக்கைகளின்படி, இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும் இன்றைய அரசியல் வாதியுமான ஐசன்கொட், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்டுள்ள "இரு நாட்டுத் தீர்வின்" ஒரு பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமியில் (மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா உட்பட்ட பகுதிகள்) ஒரு பலஸ்தீன அரசை உருவாக்குவதை திட்டவட்டமாக எதிர்க்கும் ஒரு நபராவார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில் குடியேற்றங்கள் உருவாக்கப் படுவதை தான் மிகவும் விரும்புவதாக ஐசன்கொட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேலிய குடியேற்றங்களை மேற்குக் கரைப் பகுதியில் மேலும் விரிவுபடுத்தவே இஸ்ரேல் விரும்புகின்றது.
பிரதமராகப் பதவியேற்க உள்ள ஐசன்கொட்டின் தனிப்பட்ட விருப்பும் அதுவாகவே உள்ளது. 2026 ஏப்ரல் இல், புதிய குடியேற்ற பகுதிகளான வடக்குப் பகுதி மற்றும் மேற்குக் கரையில், சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டமைக்காக அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
இதில் சில இடங்கள் "புறக்காவல் நிலையங்கள்" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அவை சர்வதேச சட்டங்களின் கீழ் மட்டும் அன்றி இஸ்ரேலின் சட்டங்களின் கீழும் சட்ட விரோதமானவை.
இவை மேற்குக் கரையில் மிகவும் வன்முறையான விதத்தில் குடியேறிய நபர்களால் நிறுவப்பட்டவை. அவர்கள் இந்த இடங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் ஆதரவுடன், பயங்கரவாத செயற்பாடுகளைப் பயன்படுத்தி பலஸ்தீன மக்களை இனரீதியாக சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீன மக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மற்றும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீன் மக்களுக்கும் இடையே பிரிவினை இருக்க வேண்டும் என ஐசன்கொட் விரும்புகின்றார்.
பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் முழுவதிலும், இஸ்ரேல் விதித்துள்ள நிறவெறி கோட்பாட்டு அமைப்பின் நிலைமையை கோடிட்டுக் காட்டும் விதத்தில் இது அமைந்துள்ளது.
ஐசன்கொட் இஸ்ரேலிய இராணுவத்தின் “தாஹியா கோட்பாடு" என்று அழைக்கப்படும் கோட்பாட்டை தீவிரமாக ஆதரிக்கும் ஒரு நபர். இந்த கோட்பாடு பெரிய அளவில் அமுல் செய்யப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்துடன் இரண்டறக் கலந்துள்ள ஒரு சமச்சீரற்ற மூலோபாய தாக்குதல் முறையே இந்த “தாஹியா கோட்பாடு" ஆகும்.
நீண்டகால தடைகளை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களின் உள் கட்டமைப்புக்கள் மீது, பெரிய அளவிலான அழிவுகளைக் கொண்டு வரும் பரந்த அளவிலான தாக்குதல்களை மையப்படுத்தி எடுக்கப்படும், இராணுவ செயற்பாடுகள் தான் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
2008 ஆம் ஆண்டில் லெபனானின் பெய்ரூட் நகர புறச்சூழலில் தாஹியா என்ற இடத்தை மையப்படுத்தி இந்த தாக்குதல் முறை முதல் முதலாக மேற் கொள்ளப்பட்டது. இந்த கோட்பாட்டின் சூத்திரதாரி அன்று இஸ்ரேலிய இராணுவத்தின் வடபிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த இதே காடி ஐசன்கொட் தான் என்பது இங்கே நினைவூட்டத்தக்கது. ’
“அன்று பெய்ரூட்டின் தாஹியா சுற்று வட்டாரத்தில் நடந்தது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
நாங்கள் அந்த கிராமங்கள் மீது சமச்சீரற்ற சக்தியைப் பிரயோகிப்போம், அங்கு பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்துவோம். எங்கள் பார்வையில், அவை பொது மக்கள் கிராமங்களே அல்ல, அவை இராணுவத் தளங்கள். இது வெறும் பரிந்துரையும் அல்ல. இது ஓர் இராணுவத் திட்டம். அதற்கு ஏற்கெனவே ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சூளுரைத்துள்ளார்.
பெய்ரூட் சம்பவத்தின் பின் இஸ்ரேல் இராணுவம் இந்த தாஹியா கோட்பாட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக காஸா மற்றும் லெபனானில் பல தடவைகள் இது பிரயோகிக்கப்பட்டுள்ளது.
காஸா இனப் படுகொலையின் போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், மேலும் காஸா மற்றும் தெற்கு லெபனானின் பெரும்பாலான பகுதிகள் கட்டாந்தரை ஆக்கப்பட்டதும், இதே கோட்பாட்டின் கீழ் தான். காஸாவின் உள்கட்மைப்புக்கள் சிதைக்கப்பட்டதும் இதே சிந்தனையின் கீழ் தான். இதே தாஹியா கோட்பாட்டை மீண்டும் பிரயோகிக்குமாறு ஐசன்கொட் இஸ்ரேலிய அரசாங்கத்தை 2026 மார்ச் இல், மீண்டும் வலியுறுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐசன்கொட் 2023 அக்டோபரில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தில் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
அவர் அரசாங்கத்தில் இருந்தபோது, இஸ்ரேல் காஸாவில் அதன் இனப் படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பைத் தொடங்கியது. இதில் பெரிய அளவிலான படு கொலைகள் மற்றும் பொது மக்களை பலவந்தமாக வேண்டுமென்றே பட்டினி போடல், கிட்டத்தட்ட முழு மக்களையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறையை கிரமமாக அழித்தல் என்பன அடங்கும்.
ஐசன்கொட் 2018 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய இராணுவத்தின் பிரதான தலைமை அதிகாரியாக இருந்தார். அப்போது இஸ்ரேல் ஸ்னைப்பர்கள் காஸாவில் குறைந்தது 189 நிராயுதபாணியான பலஸ்தீன அப்பாவிகளை கொன்றனர். இதில் 35 குழந்தைகள், மூன்று துணை மருத்துவ உதவியாளர்கள், இரண்டு ஊடகவியலாளர்கள் அடங்குவர். மேலும் 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஒரு சுயாதீனமான விசாரணயை நடத்திய ஐ.நா ஆணைக்குழு "நிராயுதபாணிகளான பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்பதை நம்புவதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. அந்த மீறல்களில் சில போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
ஐசன்கொட் இஸ்ரேலின் பாதுகாப்பு மையத்திலிருந்து வருபவர். மேலும் அவரது கூட்டணி பங்காளிகளில் சிலர் இஸ்ரேலின் மூலோபாய திசையில் எந்தவிதமான தீவிர மாற்றத்தையும் ஏற்க விரும்பாத, தீவிரவாத கருத்துக்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட வலதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள். காஸாவில், 18 மாதங்களுக்குள் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக இவர்களிடம் ஐசன்கொட் உறுதியளித்துள்ளார்.
ஜெருசலேமில் உள்ள ஹெர்சாக் அலுவலகத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய ஐசன்கொட், நெதன்யாஹுவின் அமைச்சரவையின் தீவிர வலதுசாரி போக்கு நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சும் தன்னோடு இணைந்து கொள்வதை வரவேற்பதாகக் கூறினார்.

அரபிகள் தலைமையிலான கட்சிகளுடன் ஓர் அரசாங்கத்தை அமைப்பதை ஐசன்கொட் தரப்பு நிராகரித்துள்ளது. இந்த நிலைப்பாடு அவருக்கு இன்றைய நிலையில் வலுவான ஒரு இடத்தைக் கொடுக்கலாம். யுனைடெட் தோரா யூத மதம், மற்றும் ஷாஸ் ஆகிய இரண்டு தீவிர பழமைவாத பிரிவு கட்சிகளின் ஆதரவையும் அவர் வென்றால் அவருக்கு சரியாக 61 இடங்கள் கிடைக்கும்.
எனவே இந்த நிலைமை பலஸ்தீன மக்களுக்கு தெளிவாக புரிந்தும் உள்ளது. அவர்கள் படுகொலை மற்றும் அழிவின் மற்றொரு காலகட்டத்தை நோக்கிச் செல்கின்றனர்.

"இதற்கிடையில், நெதன்யாஹு இப்போது இடைக்கால பிரதமராக இருக்கின்றார். புதிய ஆட்சியை அமைக்கும் தனது முயற்சியில் ஐசன்கொட் தோல்வியுற்றால், அரசாங்கத்தை அமைக்கும் பணியில் நெத்தன்யாஹு இயல்பாகவே இரண்டாவது இடத்தில் இருப்பார். அவரும் தனது முயற்சியில் தோல்வியுற்றால், மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அவ்வாறு நடந்தால், அதுவரை தொடர்ந்தும் நெத்தன்யாஹு தற்காலிகமாக பதவியில் இருக்க வேண்டும்.
இஸ்ரேலில் உள்ள பலஸ்தீன தலைவர்கள் என்று அழைக்கப்படும் அரசியல்வாதிகள், ஐசன்கொட் அரசாங்கம் அமைதியானதாக இருக்கும்,
ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும், காஸாவை புனரமைக்க அனுமதிக்கும் அல்லது மேற்குக் கரையை இணைப்பதை மாற்றியமைக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் இரக்கமற்ற அரபு சர்வாதிகாரிகளை பதவியில் இருந்து அகற்றி, தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும், சுதந்திரத்தை உறுதி செய்யும் ஜனநாயகத்தை, அரபுலகம் மீட்டெடுத்த பின்னரே பலஸ்தீன மக்கள் தங்கள் இழந்த உரிமைகளையும் கண்ணியத்தையும் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சூழ்நிலையில் அது மிகவும் தொலைதூரத்தில் உள்ள ஒன்றாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக அநீதி மற்றும் காட்டுமிராண்டித்தனம் என்பன உச்சத்தை எட்டியுள்ளன.
இவற்றால் அடிமை படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன மக்கள், அமெரிக்க, ஐரோப்பிய காலனித்துவ சக்திகளால் அதிகாரத்தில் நிறுவப்பட்ட கொடுங்கோலர்கள் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள மக்களை அவர்களிடம் ஒட்டு மொத்தமாக விற்று விட்டார்கள். அதற்காக அவர்கள் இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்.
லத்தீப் பாரூக்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!