news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு

27 Oct, 2026

இஸ்ரேல் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், ஈரான் போரைக் குறிப்பிட்டு பிபிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை (அக்டோபர் 27, 2026) இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ளது.

2023-ம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் நடக்கும் முதல் தேர்தல் இது. தற்போது ஈரானுடன் போரில் மறைமுகமாக இருந்து வருகிறது இஸ்ரேல்.

இந்த நேரத்தில் வரும் இஸ்ரேல் தேர்தல் தற்போதைய அதிபர் நெதன்யாகுவிற்கு நெருக்கடியை தந்துள்ளது. இவருக்கு எதிராக இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் களம் காண்கிறார்.



"எதிரி உட்பட அனைவரும் அறிந்தது போல, வெற்றிப் பயணங்களில் பிபியும் (நெதன்யாகு) நானும் ஒரு சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளோம்.

உலகின் முதன்மை பயங்கரவாத ஆதரவு நாடான ஈரான் அணுஆயுதத்தைப் பெறுவதைத் தடுக்கும் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்'-ஐ செயல்படுத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'-ஐ மேற்கொண்டோம். தற்போது ஈரானிடம் கடற்படையோ, விமானப்படையோ எதுவுமில்லை.

ஈரானின் பணவீக்கம் 301% வரை உயர்ந்துள்ளதோடு, அவர்களின் ராணுவமும் பொருளாதாரமும் சீர்குலைந்து போய்விட்டன.

நமது கடற்படை முற்றுகை அவர்களால் கச்சா எண்ணெயைப் பெற முடியாமல் தடுத்துள்ளது. மேலும் அவர்களின் ராணுவ மற்றும் அரசியல் தலைமையின் இரண்டு நிலைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன.

நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது பிபி ஒரு சிறந்த போர்வீரராகப் பிரதமராகச் செயல்பட்டார் என்பதை நினைவில் வையுங்கள்!

சில கொடிய மனிதர்களால் அமெரிக்கா 'பெரிய சாத்தான்' என்றும், இஸ்ரேல் 'சிறிய சாத்தான்' என்றும் அழைக்கப்பட்டன.

இனி உலகெங்கிலும் 'அமெரிக்காவுக்கு அழிவு, இஸ்ரேலுக்கு அழிவு' என்ற கோஷங்களைக் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. பிபி நெதன்யாகுவுக்கு வாக்களித்துப் பிரதமராகத் தேர்ந்தெடுங்கள், நாம் தொடங்கிய வேலையை நாம் முழுமையாக முடித்து ஆக வேண்டும்!"


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!