ஈரானைச் சேர்ந்த பாடகி பிரஷ்டோ அகமதி (29), கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடல் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதனைத் தொடர்ந்து, ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்டதாக ஈரானிய அதிகாரிகள் பிரஷ்டோ அகமதி மீது குற்றம் சாட்டினர். இதனையடுத்து அவர் ஈரானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாடகி பிரஷ்டோ அகமதி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில், அவருக்கு 74 கசையடிகள் (பிரம்படி) தண்டனையாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்வதற்கும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியதற்காகப் பாடகிக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!