news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈரான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க நெதன்யாகு அழுத்தம்: டிரம்புக்கு தினமும் போன்.

11 Nov, 2026
ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்குமாறு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருவதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், வெள்ளை மாளிகை அதிகாரிகளும், பிராந்தியத் தலைவர்களும் பதற்றத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு டிரம்பை வலியுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகையின்படி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாக டிரம்பை தொடர்புகொண்டு, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நீடித்து வரும் போரை ராஜதந்திர வழியில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைக்கு ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வாஷிங்டன் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், எந்தவொரு புதிய தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

சமீபத்திய அமெரிக்க இடைத்தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் ஒரு முக்கிய காரணம் என டிரம்ப் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!