news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈரான் மீதான நடவடிக்கைகள் உலகத்துக்கு பயனுள்ளது ; இஸ்ரேலியத் தூதுவர் கூறுகிறார்

11 May, 2026


இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கும், இலங்கையர்கள் உட்பட இலட்சக்கணக்கா உலக நாட்டவர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்' என்று இலங்கை மற்றும் இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதுவர் ரூவன் அசார் தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் சமகால நிலைமைகள் சம்பந்தமாக வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவருடனான நேர்காணலின்போது, இஸ்ரேலிய அரசாங்கம் லெபனானில் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் ஈரான் போர் மற்றும் இலங்கையுடனான எதிர்கால செயற்பாடுகள், இந்துசமுத்திரப் பிராந்தியப் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிட்டிருந்தார்.

லெபனானின் இஸ்ரேலின் தீவிர நடவடிக்கைகள்இலங்கை செய்திகள்

லெபனானில் இஸ்ரேலில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்திய அவர், “இஸ்ரேல் 2000ஆம் ஆண்டில் லெபனானில் இருந்து வெளியேறியது. அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 'நீலக்கோடு' (டீடரந டுiநெ) எனப்படும் எல்லையை நாங்கள் உருவாக்கினோம். 

அந்த எல்லை இருதரப்பாலும் மதிக்கப்பட வேண்டிய நிறுவப்பட்ட எல்லையாகும். துரதிர்ஷ்டவசமாக, ஈரான் ஆதரவுடன் ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேலை அழிக்கும் நோக்கில் லெபனானில் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை உருவாக்கியது”

“2006இல் அவர்கள் எங்களைத் தாக்கினார்கள், அப்போது போர் நடந்தது. 

கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 2023 அக்டோபர் 8 அன்று எங்களைத் தாக்கினார்கள். 

பின்னர் மீண்டும் மார்ச் மாதத்தில் தாக்கினார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் எங்களைத் தாக்கும்போது, ஒரு போர்நிறுத்தத்தை எட்டினோம். 

அதில் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் முழு பயங்கரவாதக் கட்டமைப்பையும் அகற்றுவது லெபனான் அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை”


“இதனால் எமது மக்கள் நேரடி எதிர்ப்பு ஏவுகணைகள், ரொக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. 

எங்களைத் தற்காத்துக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதனால்தான் நாங்கள் தெற்கு லெபனானுக்குள் நுழைந்து, ஹிஸ்புல்லா பொதுமக்களின் வீடுகளுக்குள் கட்டியெழுப்பியிருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளை வேரோடு அழிப்பதற்கு தீர்மானித்தோம். அதுவொரு தற்காப்பு நடவடிக்கை தான்” என்றார்.

லெபனானில் இஸ்ரேல் நடவடிக்கையின் இலக்கு

லெபனானுக்கள் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் இலக்கு என்ன? அது எதுவரையில் நீடிக்கும் என்பதையும் வெளிப்படுத்திய அவர்,

 “லெபனான் அரசாங்கம் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் 1701 மற்றும் அனைத்து சர்வதேசத் தீர்மானங்களின் நிபந்தனைகளுக்கு மீண்டும் மீண்டும் இணங்கத் தவறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, ஐ.நா. படைகளும் ஹிஸ்புல்லாவை கையாள்வதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், அவர்களின் செயற்பாடுகள் பற்றி உரியவாறாக அறிக்கை அளிப்பதிலும் தவறிவிட்டன”.

“எனவே இப்போது, நாங்கள் லெபனானுக்குள் இருக்கிறோம். சுமார் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியுள்ளோம், மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவும் அச்சுறுத்தல்களை நீக்கியுள்ளோம். 

ஹிஸ்புல்லாவிடம் 'ரத்வான் படை' (சுயனறயn குழசஉந) என்ற சுமார் 15,000 கமாண்டோ வீரர்கள் இருந்தனர், அவர்கள் இஸ்ரேலை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் தீவிர இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்கள். அவர்களை கட்டுப்படுத்துவதே எமது திட்டமாகும்”


“ஈரானிய ஆட்சியின் பிடியிலிருந்து லெபனானைத் துண்டிப்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் லெபனானுக்குள் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பபோம். லெபனானுடன் எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை. எங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு எம்மால் அமைதியை ஏற்படுத்த முடியும்”

“உண்மையில், எமது இராணுவம் மற்றும் அமெரிக்காவின் முயற்சியால், இப்போது லெபனான் அரசாங்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்

.இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமயாக வெற்றிபெற வேண்டுமானால், ஹிஸ்புல்லா மீண்டும் இஸ்ரேலைத் தாக்க முடியாதவாறு தெளிவான வழிமுறை இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

லெபனானிய அரசின் தற்போதைய நிலை

லெபனான் அரசாங்கத்திற்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான உறவுகளின் நிலைமைகள் பற்றி குறிப்பிட்ட இஸ்ரேலிய தூதுவர்,  “இருதரப்புக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமாக உள்ளன. 

நஸ்ரல்லாவுக்கு எதிராக நாங்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளின் இருப்பு 150,000-லிருந்து சுமார் 30,000-ஆகக் குறைந்துள்ளது”

“அசாத் ஆட்சியும் வீழ்ந்ததுள்ள நிலையில் இப்போது ஈரானால் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவளிப்பது கடினமாகியுள்ளது. 

இது லெபனானிலும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. முந்தைய லெபனான் அரசாங்கம் ஹிஸ்புல்லாவுடன் ஒத்துழைத்தது. தற்போதைய அரசாங்கம் ஹிஸ்புல்லாவிற்கு எதிரானது. இருப்பினும், ஹிஸ்புல்லாவைக் கையாள்வதற்கான கருவிகள் அவர்களிடம் இல்லை. இதுதான் சவாலான விடயமாகும்” என்றார்.

ஈரானுடனான சமாதன பேச்சுக்களின் நிலைஅரசியல் பகுப்பாய்வு

ஈரானுடன் அமெரிக்க முன்னெடுக்கும் சமாதானப் பேச்சுக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், “சமாதானப்பேச்சக்கள் பற்றிய இறுதியான நிலைமைகள் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

ஆனால் ஈரானிய ஆட்சியாளர்கள் கொள்கையை மாற்றுவது தான் அனைத்துக்குமான முடிவாக இருக்கும். 

ஈரானின் அணுசக்தி மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை நீக்கிய இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, இப்போது கடல்வழித் தடைகள் காணப்படுகின்றன. உள்ளது. ஈரானிய ஆட்சி தனது கொள்கையை மாற்றும் வரையில் கடல்வழித் தடைகளை நீக்கப்போவதில்லை”

“அமெரிக்க நிர்வாகத்தால் 15 அம்சத் திட்டம் 

முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் இதுவரை அவற்றை ஏற்கவில்லை.

 இதில் அவர்களின் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகளை அழிப்பது, பொலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவை நிறுத்துவது ஆகியவை உள்ளடங்குகின்றன. 

இவை நிறைவேறினால், மத்திய ஆசியா நிலையான அமைதிப்பூங்காவாக மாறும். அந்தச் சூழலானது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, வளைகுடா நாடுகளுக்கும் லெபனானுக்கும் உள்ள முக்கிய விடயமாகும்” என்று தெரிவித்தார்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம்

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் பற்றிக் குறிப்பிட்ட இஸ்ரேலிய தூதுவர், “ஈரானியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து உளவுத் தகவல்களைப் பெறலாம். 

ஆனால் ஈரானின் தற்போதைய ஆட்சிக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று தான் அந்த நாடுகளை நாங்கள் வலியுறுத்துகின்றோம். 

ஏனெனில் அவர்களுக்கு உதவும் வரை அதன் விளைவுகள் சர்வதேச சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அனைத்து நாடுகளும் தற்போதைய போரை விரைவில் முடிப்பதற்காக ஈரானிய ஆட்சி தனது ஆக்கிரமிப்புக் கொள்கைகளை மாற்றுவதற்கான இராஜதந்திர அழுத்தத்தை வழங்க வேண்டும்” என்று கோரினார்.

பாகிஸ்தானின் மத்தியஸ்தம் நம்பிக்கைக்குரியதல்ல

பாகிஸ்தான் அமெரிக்க, ஈரான் பேச்சுக்களுக்கு வழங்கும் மத்தியஸ்தம் குறித்து கருத்துவெளியிட்டவர், “பாகிஸ்தானியர்களை நாங்கள் நம்பவில்லை,

 ஏனெனில் அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினர். இருப்பினும், ஈரானின் கொள்கையை மாற்றுவதற்கான அழுத்தம் கொடுப்பதற்கு, எதிர்மறையான பங்கு வகிக்கும் நாடுகளின் சேவைகளைக்கூட அமெரிக்கா பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம்”

“உதாரணமாக, கட்;டாரை சொல்லலாம். கட்டாரும் ஒரு சிக்கலான நாடுதான், 

ஆனால் அவர்கள் மூலம் ஒரு போர்நிறுத்தத்தைக் கொண்டு வர முடிந்தது. 

அமெரிக்கா யாரை பயன்படுத்த விரும்புகிறது என்பது அவர்களின் விருப்பம். ஆனால் எங்களுக்குத் தேவை ஈரானின் அச்சுறுத்தல்கள் இல்லாத பிராந்தியம். 

இஸ்ரேலின் அழிவிற்காகக் காத்திருக்கும் ஒரு கடிகாரம் தெஹ்ரான் நகரின் நடுவில் இருந்தது. அதனைக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

நாங்கள் நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் எம்மை அழிக்கும் திறன்களை நிலத்தடியில் மறைத்து விடுவார்கள். ஆகவே தான் இராணுவ ரீதியாக அவர்களின் திறன்களை அழித்து வருகின்றோம்” என்றார்.

ஹோர்முஸ் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய ரீதியிலான பொருளாதார அச்சுறுத்தல் தொடர்பில் கருத்துவெளியிட்ட தூதுவர், “ஈரானிய ஆட்சியாளாகள் அவர்கள் தங்களின் நண்பர்கள் என்று அழைப்பவர்களின் நலன்களைக்கூட சிதைப்பதற்கே முடிவு செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு இலங்கையை நட்பு நாடாக அவர் வெளிப்படுத்தினாலும் இலங்கை வரும் சரக்கு கப்பல்களை தடுக்கின்றார்கள்.  

உண்மையில் அதற்கு எந்தக் காரணமும் இல்லை. அவர்கள் இலங்கையைத் தண்டிக்கிறார்கள். 

அவர்கள் நடுநிலையானவர்கள் அல்ல. நண்பர்கள் அல்லர். அவர்கள் ஹோர்மூஸை மூடியுள்ளமையானது அவர்களுக்கே பாதகமாக அமையும். அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையால் அவர்களின் எண்ணெய் வியாபாரம் அழிந்து போகும். இதன் மூலம் அவர்கள் வைத்திருக்கும் செல்வாக்கை இழப்பார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!