news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈரான் மீது போர் தொடுக்க 37.5 பில்­லியன் டொலர்­களை செல­விடும் ட்ரம்ப்

14 Aug, 2026
கடந்த மாதம் அமெ­ரிக்க செனட் நிதி ஒதுக்­கீட்டுக் குழுவில் உரை­யாற்­றிய அமெ­ரிக்க பாது­காப்பு செய­லாளர் பீட் ஹெக்செத், ஈரான் மீதான அமெ­ரிக்கப் போரின் செலவு 37.5 பில்­லியன் டொலர்­க­ளுக்கும் அதி­க­மாக உள்­ளது. இது முந்­தைய பொது மதிப்­பீ­டு­களை விட கிட்­டத்­தட்ட 8 பில்­லியன் டொலர் அதி­க­ரிப்பைக் குறிக்­கின்­றது என்ற தக­வலைத் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்க மக்­களின் வரிப் பணத்தில் இவ்­வ­ளவு பெரிய தொகை அமெ­ரிக்­கர்­களின் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்த உத­வு­வ­தற்­காக செல­வி­டப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக அதற்கு மாறாக இன்­னொரு நாட்டின் தலைவர், இரா­ணுவ வீரர்கள், எந்த வகை­யிலும் பாதிப்­பில்­லாத பள்ளிக் குழந்­தைகள், மற்றும் அப்­பாவி பொது­மக்­களைக் கொன்று குவிப்­ப­தற்கும், இதே அமெ­ரிக்­காவால் நான்கு தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக மனி­தா­பி­மா­ன­மற்ற தடை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட ஈரானில் கட்­டி­டங்கள், பள்­ளிகள், வீதிகள், பாலங்கள், அடிப்­படை வச­தி­களை வழங்கும் உட்­கட்­ட­மைப்­புக்கள் மற்றும் மருத்­து­வ­ம­னை­களை குண்­டு­வீசி அழிப்­ப­தற்கும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

ஈரானைத் தாக்கும் இந்த கொடூ­ர­மான குற்­றத்தை, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளி­கையில் தன்னை அதி­கா­ரத்தில் அமர்த்­திய கோடீஸ்­வர சியோ­னிச யூத எஜ­மா­னர்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வ­தற்­காகச் செய்து கொண்­டி­ருக்­கின்றார்.

உலகின் ஒரே வல்­ல­ரசு என்று அழைக்­கப்­பட்ட அமெ­ரிக்­காவின் இன்­றைய வெட்கக் கேடான நிலைமை இதுதான். அதன் 250 ஆண்­டு­கால வர­லா­றா­னது, 

உல­கெங்­கிலும் உள்ள நாடு­களில் மக்­களை கொல்­வது மற்றும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது என்ற மோச­மான தட­யங்­க­ளையே மட்­டுமே கொண்டுள்ளது. பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் என்ற போர்­வையில்  அரபு மற்றும் முஸ்லிம் உலக நாடு­களை பல­வீ­னப்­ப­டுத்தி, தனது கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொண்டு, மத்­திய கிழக்கில் இஸ்ரேல் பாது­காப்­பாக இருப்­பதை உறுதி செய்­வ­தற்­காக, இது­வரை அமெ­ரிக்­காவும் அவர்­களின் பிரித்­தா­னி­ய-­, ஐ­ரோப்­பிய கூட்­டா­ளி­களும் பல முஸ்லிம் நாடு­களை அழித்து, மில்­லியன் கணக்­கான முஸ்­லிம்­களைக் கொன்று குவித்தும் உள்­ளனர்.  

அமெ­ரிக்க செனட் நிதி ஒதுக்­கீட்டுக் குழுவில் உரை­யாற்­றிய பாது­காப்புச் செய­லாளர் பீட் ஹெக்செத், பென்­ட­கனின் ஆயுதக் களஞ்­சி­யத்தை மீள் வடி­வ­மைப்­ப­தற்கும் வர­வு­செ­லவுத் திட்ட பற்றாக் குறையைத் தவிர்ப்­ப­தற்கும் ஒரு "அவ­சர, தேவை" நட­வ­டிக்­கை­யாக யுத்த செல­வு­களை ஈடு­கட்ட மேலும் 67 பில்­லியன் டொலர் தேவை என்ற கோரிக்­கையை முன்­வைத்தார். பீட் ஹெக்செத் இந்த தொகையை செனட் உறுப்­பி­னர்கள் முன்­னி­லையில் உறு­திப்­ப­டுத்­தினார். இதில் நடப்பு நிதி­யாண்டின் இறுதி வரை­யான செல­வுகள் மற்றும் மதிப்­பி­டப்­பட்ட செல­வுகள் அடங்கும் என்றும் குறிப்­பிட்டார்.

ஏதோ கார­ணங்­களை முன்­வைத்து யுத்­தங்­களை உரு­வாக்க, அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அடிக்­கடி லஞ்சம் வழங்கும் அமெ­ரிக்­க-­, ஐ­ரோப்­பிய ஆயுதத் தொழில் துறை­யி­ன­ருக்கு இது ஒரு மிகப்­பெ­ரிய வரப்­பி­ர­சா­த­மாகும்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்


ஏறக்­கு­றைய 93 மில்­லியன் மக்கள் தொகையைக் கொண்ட, ஈரான் போன்ற ஒரு நாட்டின் மீது, ஒரு முழு அள­வி­லான தரை­வழி படை­யெ­டுப்பு நடத்­தப்­ப­டாமல், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வான அமெ­ரிக்க துருப்­புக்­களைக் கொண்டு, அவர்­களைக் கையாள நினைப்­பது சாத்­தி­ய­மற்­றது என்றும் அமெ­ரிக்க செனட் சபையில் வலி­யு­றுத்திக் கூறப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், இந்த விசா­ர­ணை­களின் போது ஜன­நா­யகக் கட்­சியின், நியூயோர்க் பிர­தி­நிதி  செனட்டர் கிர்ஸ்டன் கில்­லி­பிராண்ட், அமெ­ரிக்க குடி­மக்கள் தங்கள் குடும்­பங்­க­ளுக்கு உண­வ­ளிக்க முடி­யாது தவித்துக் கொண்­டி­ருக்கும் தரு­ணத்தில், ட்ரம்ப் நிர்­வாகம் காங்­கி­ர­ஸி­ட­மி­ருந்து, வெடி­குண்­டு­க­ளுக்­காக வரம்­பற்ற பணத்தை கோரு­வ­தாக குற்றம் சாட்­டினார். அதே நேரத்தில் ஏற்­கெ­னவே வெற்றி பெற்று விட்­ட­தாக ஜனா­தி­பதி அறி­வித்­துள்ள ஒரு யுத்­தத்­துக்கு ஹெக்செத் ஏன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான டொலர்­களை மீண்டும் கேட்­கின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

இந்த விசா­ரணை ஹெக்செத்துக்கும் ஜன­நா­யகக் கட்சி செனட்டர் கெரி பீட்­ட­ருக்கும் இடை­யி­லான கடும் கூச்சல் குழப்­பங்­க­ளோடு முடி­வ­டைந்­தது. ஹெக்செத்  ஒரு தோல்வி கண்ட நபர் என்று கெரி பீட்டர் குறிப்­பிட்டார். மேலும் ட்ரம்ப் நிர்­வாகம் "என்­றென்றும் யுத்தம்" என்ற நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது என்றும் அவர் சாடினார்.

ஈரான் மீது ட்ரம்ப்பின் சுய விருப்பில் தொடங்­கப்­பட்ட சட்ட விரோ­த­மான போர், அமெ­ரிக்க குடும்­பங்கள், அமெ­ரிக்க படை வீரர்கள், மத்­திய கிழக்கில் உள்ள பொது­மக்கள்,  அமெ­ரிக்­காவின் உல­க­ளா­விய நலன்கள், சுற்­றுச்­சூழல் மற்றும் உலகப் பொரு­ளா­தாரம் என்­ப­ன­வற்றின் மீது கடு­மை­யான தாக்­கங்­க­ளையும், செல­வு­க­ளையும் தொடர்ந்து ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

ட்ரம்­பினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த யுத்தம், குறு­கிய காலத்தில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தீங்­கு­களின் அளவை இப்­போ­தைக்கு மதிப்­பி­டு­வதும் கடி­ன­மாகும்.

ஜூன் 17 போர் நிறுத்த சரி­வுடன்  ஈரானும், ட்ரம்ப் நிர்­வா­கமும் ஹோர்முஸ் நீரி­ணையின் முற்­று­கை­களை மீண்டும் அமு­லுக்கு கொண்டு வரு­வ­தாக அறி­வித்­தன. மேலும், ஜனா­தி­பதி ட்ரம்ப், ஹோர்முஸ் வழி­யான கப்­பல்கள் மீதான கட்­ட­ணங்கள் பற்றி முன்­னுக்குப் பின் முர­ணான அறி­விப்­புக்­க­ளையும் விடுத்தார். இவற்றின் கார­ண­மாக    இந்த போர் தொடர்­பான செல­வுகள் அனைத்தும் வரும் நாட்­க­ளிலும், வாரங்­க­ளிலும் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும் என்று சம்­பந்­தப்­பட்ட நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்டி உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் உள்­நாட்டு பொரு­ளா­தார செலவு;

அமெ­ரிக்­காவில் ஈரான் மீதான ட்ரம்ப் நிர்­வா­கத்தின் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்பு இருந்­ததை விட எரி­பொ­ரு­ளுக்­கான விலைகள் அதி­க­மாகி உள்­ளன. ஜூலை 14 ஆம் திகதி நில­வ­ரப்­படி, ஈரான் மீதான யுத்தம் தொடங்­கி­யதில் இருந்து எரி­வாயு மற்றும் டீச­லுக்­கான செல­வாக அமெ­ரிக்­கர்கள் 68 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான தொகையை மேல­தி­க­மாக செலுத்­தி­யுள்­ளனர். 

பிரவுன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஈரான் போர் எரி­சக்தி செலவு கண்­கா­ணிப்பு மையம் இந்தத் தக­வலைத் தெரி­வித்­துள்­ளது. குடும்ப ரீதி­யாகப் பார்க்­கையில் இது ஒரு குடும்­பத்­துக்கு 500 டொல­ருக்கும் அதி­க­மான மேல­திக செலவை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எரி­வாயு மற்றும் டீசல் விலைகள் போருக்கு முன் இருந்­ததை விட   சுமார் 30 சத­வீதம் அதி­க­மாகி உள்­ளன. வழக்­க­மான பெட்­ரோ­லுக்­கான தேசிய சரா­சரி விலை ஜூலை 14 ஆம் திகதி ஒரு கல­னுக்கு 3.86 டொல­ராக இருந்­தது. இது பெப்­ர­வரி 27 அன்று 2.98 டொல­ராக இருந்­தது என்று மதிப்­பீ­டுகள் தெரி­வித்­துள்­ளன.

ஈரான் மீது அமெ­ரிக்கா தொடுத்­துள்ள இந்த யுத்தம் தெளி­வான வெளி­யேறும், மூலோ­பா­யங்கள் எதுவும் இல்­லாத ஒரு தவ­றான மூலோ­பாய கணிப்­பீடு, என்று முன்­னணி பேரா­சி­ரி­யர்கள் மற்றும் கல்வி சார் வல்­லு­நர்கள் வாதி­டு­கின்­றனர்.

அமெ­ரிக்­காவை எவ­ராலும் ஒரு போதும் தோற்­க­டிக்க முடி­யாது என்ற கருத்­துக்கு ஒரு உண்­மை­யான முடிவை இந்த மோதல் தந்­துள்­ளது என்று சிகாகோ பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ரொபர்ட் பேப் கூறு­கின்றார். 

செலவு குறை­வான துல்­லி­ய­மான ஆயு­தங்­களை நோக்­கிய மாற்றம், உள்ளூர் மக்­களை அந்­நி­யப்­ப­டுத்­து­வது, "என்­றென்றும் போர்" என்ற நிலைக்கு இந்த மோதலை விரிவு படுத்­து­வது என்­பன நீண்­ட­கால அடிப்­ப­டையில் அபாயம் மிக்­கவை என்றும் அவர் எச்­ச­ரித்­துள்ளார்.  

எந்த வித­மான தெளி­வான மாற்றுத் திட்­டங்­களும் அற்ற நிலையில், அமெ­ரிக்கா   ஏற்­க­னவே இந்­த­மோ­தலின் மூலோ­பா­யத்தை இழந்­து­விட்­டது என்று சிகாகோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் மற்­றொரு பேரா­சி­ரியர் ஜான் மியர்­ஷைமர் கூறு­கின்றார்.

இவர்­க­ளோடு சேர்த்து 100 அமெ­ரிக்க சட்ட பேரா­சி­ரி­யர்­க­ளையும் அறி­ஞர்­க­ளையும் கொண்ட குழு  கூட்டு எச்­ச­ரிக்கை ஒன்­றையும் வெளி­யிட்­டுள்­ளது.    

ஈரான் மீதான ஆரம்ப கட்ட கூட்டுத் தாக்­கு­தல்கள் ஐக்­கிய நாடுகள் சாச­னத்தை முழு­மை­யாக மீறி­யுள்­ள­தாக தமது கூட்­ட­றிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள அவர்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டத்தின் சாத்­தி­ய­மான வரம்பு மீறல்கள் குறித்தும் தமது ஆழ்ந்த கவ­லை­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

"இந்த அறிக்­கையில் ஒப்­ப­மிட்­டுள்ள, அமெ­ரிக்­காவை தள­மாகக் கொண்ட சர்­வ­தேச சட்ட வல்­லு­நர்கள், பேரா­சி­ரி­யர்கள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்­க­ளா­கிய நாங்கள், மத்­திய கிழக்கில் தற்­போ­தைய ஆயுத மோதலில் அமெ­ரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் என்­ப­ன­வற்றின் சர்­வ­தேச சட்­டத்தின் கடு­மை­யான மீறல்கள் மற்றும் அவை வெளி­யிட்டு வரும் ஆபத்­தான சொல்­லா­டல்கள் குறித்த எமது ஆழ்ந்த கவ­லையை இதன் மூலம் வெளிப்­ப­டுத்­து­கின்றோம். 

ஒவ்­வொரு நாளும் 1-2 பில்­லியன் வரை­யான அமெ­ரிக்க டொலர் செலவை  அமெ­ரிக்க வரி செலுத்­து­வோ­ருக்கு ஏற்­ப­டுத்தும் இந்தப் போர், பிராந்­தி­யத்தில் உள்ள பொது­மக்­க­ளுக்கு குறிப்­பி­டத்­தக்க தீங்­கு­க­ளையும் விளை­விக்­கின்­றது. இதன் விளை­வாக மத்­திய கிழக்கு முழு­வதும் நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் மற்றும் கடு­மை­யான சுற்­றுச்­சூழல் மற்றும் பொரு­ளா­தார பாதிப்­புக்­க­ளையும் மக்கள் அனு­ப­விக்­கின்­றனர்.

நாம் கோடிட்டுக் காட்­டி­யுள்ள விட­யங்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள், மத்­திய கிழக்கில் உள்ள பொது­மக்­க­ளுக்கு கடு­மை­யான தீங்­கு­களை விளை­விக்­கின்­றன. அவை மோதலை தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்கும், சுற்­றாடல்   மற்றும் உலகப் பொரு­ளா­தா­ரத்தை சேதப்­ப­டுத்­து­வ­தற்கும் பங்­க­ளிக்­கின்­றன. 

அவற்றால் சட்­டத்தின் ஆட்சி இழிவு படுத்­தப்­படும்   ஆபத்தும் உள்­ளது. இவற்றால் நாங்கள் பெரும் கவ­லைக்கு ஆளாகி உள்ளோம். சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­களின் சிரேஷ்ட அதி­கா­ரி­களின் பகி­ரங்க அறிக்­கைகள், அந்­தந்த நாடு­களின் அர­சு­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்ள, தத்­த­மது நாடு­களின் பொது­மக்கள் மற்றும் ஆயுதப் படை­களின் உறுப்­பி­னர்­களைப் பாதுகாக்க உதவும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் விதிகளுக்கு ஆபத்தான அவமரியாதையை ஏற்படுத்துகின்றன என்பதையும் இதன் மூலம் சுட்டிக் காட்டுகின்றோம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..  

ஐ.நா. சாசனம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களை எல்லா நேரங்களிலும் எல்லா மட்டங்களிலும் நிலை நிறுத்துமாறும், சர்வதேச சட்டத்தின் விதி முறைகள் மீதான அமெரிக்க உயர் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் மரியாதை என்பனவற்றை பகிரங்கமாக தெளிவு படுத்துமாறும் 100 அறிவு ஜீவிளைக் கொண்ட இந்தக் குழுவினர் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

ட்ரம்பின் கொள்கைகளையும் நிகழ்ச்சி நிரலின் பெரும் பகுதியையும் வடிவமைத்த ஹெரிடேஜ் மன்றம் என்ற அமைப்பு, இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது உதவியை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது என்பதை கட்டுரையாளர் டாக்டர் சானியா பைசல் எல்-ஹுசைனி, சுட்டிக் காட்டி உள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

-லத்தீப் பாரூக்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!