news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்: 15 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பு; 9 பேர் விடுதலை

22 Sep, 2026
-உயிர்த்த ஞாயிறு வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு விபரம் வெளியீடு!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர், கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்ட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற சிறப்பு ட்ரயல்-அட்-பார்  அமர்வு இந்தத் தீர்ப்பை செவ்வாய்க்கிழமை (22) அன்று மாலை 5 மணியளவில் வழங்கியது.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த நீண்ட விசாரணையை சிறப்பு ட்ரயல்-அட்-பார் அமர்வு கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி நிறைவு செய்திருந்தது.

குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு விபரம் வெளியீடு!


குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள் (15 பேர்) :


1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு; ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி



குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் (9 பேர்):

1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)

2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)

3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்

4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்

5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்

6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா)

7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா

8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி

9. முகம்மது அக்ரம் அஹக்கம்



சிறைக்காவலில் உயிரிழந்தவர் (1 நபர்):

* யாசின் பாவா அப்துல் ரவூப் – வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சிறைக்காவலில் உயிரிழந்துள்ளார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் நீதிமன்றத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!