பதுளை பண்டாரவளை அம்பதண்டேகம களுவல பகுதியில் அமைந்துள்ள உடராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று மாலை நீராடச் சென்றிருந்த நான்கு பாடசாலை மாணவர்களுள், உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாகக் கால் வழுக்கி சுமார் 40 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அவருடன் சென்றிருந்த நண்பர்களில் நீந்தத் தெரிந்த மற்றொரு மாணவர் உடனடியாகப் பள்ளத்தில் இறங்கி, காயமடைந்த மாணவரை மீட்டு முதலுதவி வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆழமான பள்ளத்திலிருந்து அந்த மாணவரைப் பாதுகாப்பாக மேலே கொண்டு வருவதற்காக 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சுமார் இரண்டு மணி நேரம் கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மீட்கப்பட்ட மாணவர் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வாறான ஆபத்தான நீர்நிலைகளில் நீராட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது தங்களுக்குப் பெரும் கவலையளிப்பதாகப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!