உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை ; ஆரோக்கிய குறைபாடு எச்சரிக்கை
நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்களா இல்லையா என்பதை உங்கள் உடல் சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை எழுந்தவுடன் நாக்கில் வெள்ளை படலம் அதிகமாக காணப்படுவது, உடலில் கழிவுகள் மற்றும் நச்சுக்கள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் போதுமான தூக்கம் எடுத்த பிறகும் தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் புத்துணர்ச்சி இல்லாத நிலை காணப்பட்டால், அது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இருப்பதை காட்டலாம்.
உணவு சாப்பிட்ட பிறகு உடனே தூங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது, இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கும் ஆரம்ப நிலையாகவும், இது எதிர்காலத்தில் Diabetes ஏற்படும் அபாயத்தைக் காட்டும் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
வாய் துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால், அது செரிமான மண்டல ஆரோக்கியக் குறைபாட்டை காட்டலாம். அதேபோல் மலச்சிக்கல், அடிக்கடி முகப்பருக்கள் தோன்றுதல், மற்றும் உணவுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் பசி ஏற்படுதல் போன்றவை செரிமான பிரச்சனைகள் அல்லது குடல் ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இவ்வாறான அறிகுறிகள் நீண்ட காலமாக தொடர்ந்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு பழக்கங்களை மாற்றுதல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், போதுமான நீர் அருந்துதல் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் அவசியம் என சுகாதார ஆலோசனைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!