news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உதடு வீங்கிடுச்சு.. குளிப்பதை வேடிக்கை பாத்தாங்க.. ஆத்தாடி பாவாடை காத்தாட பாடல் ரகசியம்.. குயிலி!

18 Oct, 2026



 சென்னை: இசைஞானி இளையராஜாவின் இசையில் எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்கள் வந்திருந்தாலும், 

1984ஆம் ஆண்டு வெளியான 'பூவிலங்கு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆத்தாடி பாவாடை காத்தாட' பாடலுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. 

நடிகர் முரளி மற்றும் நடிகை குயிலி ஆகிய இருவருக்குமே அறிமுக படமாக அமைந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, குறிப்பாக இந்த பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த சுவாரசியமான மற்றும் கஷ்டமான அனுபவங்களை நடிகை குயிலி பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

 உதடு வீங்கிடுச்சு: பாடல் படப்பிடிப்பின் போது முரளி ஒரு பக்கத்தில் அமர்ந்திருப்பார், நான் குளித்துக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் எறும்பு கடித்ததால் என்னுடைய மேல் உதடு பயங்கரமாக வீங்கிவிட்டது. 

அதோடு மட்டுமில்ல நான் குளிக்கும் போது தான் அந்த பாட்டு வரும் என்பதால், ஒவ்வொரு காட்சிக்கும் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தேன்.

 


படத்தில் பார்க்கும் போது உங்களுக்கு நானும் முரளியும் இருப்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அந்த பாட்டு எடுக்கும் போது சுற்றி ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

அந்த காட்சியில் நான் வெறும் பாவாடை மட்டுமே கட்டி இருந்ததால், எனக்கு ரொம்பவே கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. 

 ஒரே நொடில 3 தடவை கண் சிமிட்டினேன்: இந்த பாடலுக்கு தாரா மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். பாடலில் வெட்கப்படும் ஒரு காட்சியில், ஒரே ஒரு நொடிக்குள் மூன்று முறை கண் சிமிட்டியிருப்பேன். 

இன்றைக்கு அந்த பாடலை பார்த்தால் கூட அந்த ரியாக்ஷன் தான் நினைவுக்கு வரும். முரளி தெலுங்கில் ஏற்கனவே நடித்திருந்தாலும், தமிழில் அவருக்கு அறிமுக படம் 'பூவிலங்கு' தான். 

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சுமார் 3 மாதங்கள் நடைபெற்றன. ஒரு ஷெட்யூல் 20 நாட்கள் வரை இருந்தது என குயிலி அந்த படம் குறித்து பேசி இருந்தார். 

பல ஆண்டுகள் கடந்தும் இளையராஜாவின் மேஜிக்கால் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டப்பில் இருக்கும் 'ஆத்தாடி பாவாடை காத்தாட' பாடலின் பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!



கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!