உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்புக்கும் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.இருப்பினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
இதனூடாக உயிரச்சுறுத்தல் இருப்பதையும் நான் அறிவேன். நாட்டு மக்களுக்காக சவால்களை ஏற்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். சவால்களுக்கு மத்தியில் பதவி விலக நேரிட்டால் அதனை மகிழ்வுடன் ஏற்று வெளியேற தயாராகவே உள்ளேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சமூகமும் நீதி மற்றும் நியாயத்தை தேடும் வழக்கு இது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் காரணமாகவே வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவது தாமதப்படுத்தப்பட்டது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வெகுவிரைவில் வெளிவரும். நீதியை தேடும் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது எனது கடமையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!