news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகளவில் முதல் நாளில் ரூ. 45 கோடி வசூல் செய்த ‘த்ரிஷ்யம் 3’

22 May, 2026

இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் நடிகர் மோகன்லால் கூட்டணியில், மீனா, எஸ்தர் அனில், அன்ஷிபா, ஆஷா சரத் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவிற்குப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் முதல் இரு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏவலோடு காத்துக்கொண்டிருந்தனர். 


ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் நேற்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. எனினும், முந்தைய பாகங்கள் அளவிற்கு ரசிகர்களை இப்படம் முழுமையாகத் திருப்திப்படுத்தத் தவறியதால், சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 


இருந்தபோதிலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்த காரணத்தினால் வசூலில் எந்தப் பாதிப்பும் இன்றி, உலகளவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் 45 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!