ஐ.நா மேடையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளரை நோக்கி பாகிஸ்தான் அமைச்சர் செய்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் அவரிடம், "ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான தலிபான்களின் கடுமையான கொள்கைகள் குறித்து பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு என்ன? ஆரம்பத்தில் தலிபான்கள் உங்களுடன் நட்பாக இருந்தபோதே அவர்களிடம் இதுகுறித்து பேசியிருக்கலாமே" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்தப் பெண்ணின் ஆடையைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் அமைச்சர், "இப்படிப்பட்ட ஆடையுடன் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச் செல்லாதீர்கள், இல்லையெனில் அவர்கள் உங்களை" என்று கூறி தனது கழுத்தை அறுப்பது போலச் சைகை செய்தார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!