பத்தரமுல்லையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய Sagara Kariyawasam, தற்போதைய அரசின் செயற்பாடுகள் சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்குவதாக கடுமையாக குற்றம்சாட்டினார். “மோசடியான திசைகாட்டி அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக – மாபெரும் மக்களின் குரல்” என்ற தொனிப்பொருளில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட தூண்டுதலா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சாடினார். அதேவேளை, சில வழக்குகளில் அதிகாரிகள் மௌனம் காக்கப்படுவதாகவும், அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் நாட்டில் நீதி மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!