நியூயார்க்: உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், கடந்த சில வாரங்களாக உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற தொழிலதிபருடன் ஜென்சன் ஹுவாங் ரகசியத் தொடர்பில் இருந்ததாக வெளியான தகவல் தொழில்நுட்ப உலகையே அதிர வைத்தது.
இந்தச் சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால் 11 நாட்களுக்குப் பிறகு மீண்டும் என்விடியா சிஇஓவாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி நிக்கோலஸ் எஃப்டிமியாடெஸ் வெளியிட்டுள்ள ஒரு புதிய கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, சீனாவின் உளவு வலையில் ஜென்சன் ஹுவாங் சிக்கினாரா அல்லது ஜென்சன் ஹுவாங்கை வைத்தே அமெரிக்க உளவுத்துறை சீனாவுக்குத் தவறான தகவல்களை அனுப்பியதா என்ற கோணத்தில் அவர் பேசியுள்ளார்.

ஜென்சன் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங்
பின்னணி என்ன?
சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெகாஸ்பீட் என்ற நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங், சீனாவின் உளவு அமைப்பான 'எம்.எஸ்.எஸ்' அதிகாரிகளுடன் நீண்ட காலமாகத் தொடர்பில் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது.
அமெரிக்காவின் தடையை மீறி, என்விடியாவின் அதிநவீன ஏஐ சிப்களைச் சீனாவுக்கு ரகசிய
மாகக் கடத்துவதற்கு இவரது நிறுவனம் உதவியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான், ஜென்சன் ஹுவாங்கிற்கும் ஆலிஸ் ஹுவாங்கிற்கும் இடையே தனிப்பட்ட முறையில் நெருக்கம் இருந்ததை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. இதன் மூலம் என்விடியாவின் ரகசியத் தகவல்கள் சீனாவுக்குச் சென்றிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
அமெரிக்காவின் 'மாஸ்டர் பிளான்' இருக்கலாமா? இது குறித்துப் பேசிய முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி நிக்கோலஸ் எஃப்டிமியாடெஸ், உளவுத்துறை உலகில் நடக்கக்கூடிய இரண்டு சாத்தியக்கூறுகளை முன்வைத்துள்ளார்.
முதலாவது, சீன உளவாளி என்று தெரியாமலேயே ஜென்சன் ஹுவாங் அந்தப் பெண்ணிடம் ஏமாந்திருக்கலாம்.
இரண்டாவது மற்றும் மிக முக்கியமான கோணம் என்னவென்றால், ஆலிஸ் ஹுவாங் ஒரு சீன உளவாளி என்பதை அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே அறிந்திருக்கலாம்.
அப்படி அறிந்திருந்தால், ஜென்சன் ஹுவாங்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆலிஸ் ஹுவாங் வழியாகச் சீனாவுக்குத் தவறான மற்றும் திசைதிருப்பும் தொழில்நுட்பத் தகவல்களை அமெரிக்கா திட்டமிட்டுக் கசியவிட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உளவுத்துறையில் எதிரி நாட்டைக் குழப்புவதற்கு இதுபோன்ற தந்திரங்கள் கையாளப்படுவது வழக்கம்.
தற்போதைய நிலை என்ன? இருப்பினும், அமெரிக்கா உண்மையிலேயே ஜென்சன் ஹுவாங்கைப் பயன்படுத்தி சீனாவுக்குத் தவறான தகவல்களை அனுப்பியதா என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்பதையும் நிக்கோலஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது ஒரு யூகம் மட்டுமே தவிர, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல என்று தொழில்நுட்ப வல்லுநர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!