நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலத்தை பிரதானமாக அடிப்படையாகக் கொண்டுள்ளது.
குறித்த வாக்குமூலத்தில், நாமல் ராஜபக்சவிடம் 800,000 அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நிமல் பெரேரா குறிப்பிட்டிருந்ததாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணம் பிரியங்கா விஜேநாயக்கவினால் நிமல் பெரேராவுக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் புலனாய்வாளர்களிடம் இருப்பதாகவும், எனினும் அந்தப் பணத்தை பின்னர் நாமல் ராஜபக்சவிடம் பெரேரா வழங்கினார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் தான் நாமலுக்கு வழங்கிய பணம் தொடர்பில் நிமல் பெரேரா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சத்திய கடதாசி ஒன்றை வழங்கியுள்ளார். அதை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்திரேலியா சென்று அவரிடம் பெற்று வந்து நீதிமன்றில் சாட்சி ஆவணமாக சான்றுபடுத்தியுள்ளனர். எனவே நாமல் இலஞ்சம் பெற்றமை உறுதியாகியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொள்வனவு ஊழல் வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றார்.
இவ்விவகாரம் பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்சகைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இலஞ்சமாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டபோது அவரை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு பிரதான நீதிவான் உத்திரவிட்டிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைகள் கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரை மீண்டும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்திரமின்றி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணச்சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இவர் இது தொடர்பில் இரு வழக்குகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச 2029 ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கே அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என பொதுஜன பெரமுன தெரிவித்தாலும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே நாமல் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலையில் நாமல் ராஜபக்ச இவ் விவகாரத்தில் பணம் பெற்றாரா இல்லையா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கும் இருந்து வந்தது. ஆனால் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மகிந்தவின் ஆதரவாளருமான உதய கம்மன் பில் நாமல் பணம் பெற்ற விடயத்தை ஊடகவியலாளர் மாநாட்டில் போட்டுடைத்துள்ளார்.
அதாவது நாமல் பணம் பெற்றது உண்மை ஆனால் அது இலஞ்சம் அல்ல அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த பணம் அது என குட்டை உடைத்துள்ளார். எனவே நாமல் எந்த வகையிலாவது பணம் பெற்ற விடயம் உறுதியாகியுள்ளது. அதே வேளை உதய கம்மன் பில போன்றோரின் கருத்துகள் மகிந்த தரப்பினரை ஆத்திரமூட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை நாமல் ராஜபக்சவை ஆதரிப்போருக்கு எதிராக ஒமல்பே சோபித தேரர் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்திருக்கின்றமை ராஜபக்ச தரப்பினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. படுகொலையாளி மற்றும் ஊழல்வாதி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் எனக் கூறுபவர்களின் உளவியலை பரிசோதிக்க வேண்டும் என்று வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
முன்வைத்தார்.பொருளாதார படுகொலையும் குடியுரிமை விவகாரமும்நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தேரர் சுட்டிக்காட்டினார்.
அத்தீர்ப்பைத் தொடர்ந்து, ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை முன்வைத்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.எதிர்க்கட்சித் தலைவர் மீதான விமர்சனம்அவ்வாறு நாடாளுமன்றத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தற்போது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்காக சிறை சென்றுள்ள நாமல் ராஜபக்ஷவுக்காக குரல் கொடுத்து வருவதாக ஓமல்பே சோபித தேரர் குற்றம் சாட்டினார்.
இத்தகைய முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகளைச் சாடிய அவர், "இதுவே இவர்களின் கேவலமான அரசியல். இந்த கேடான அரசியல் கலாசாரத்தினால்தான் நாடு இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது" எனக் குறிப்பிட்டார்.
எனவே, நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்து, பொதுமக்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் சுயரூபத்தை அறிந்து மிகவும் தெளிவுடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரினதும் கருத்துகளை விட தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் விடயம் நாமல் ராஜபக்ச எயார் பஸ் விவகாரத்தில் பெற்றது இலஞ்சமா அல்லத அன்பளிப்பா என்பது தான். இது குறித்து உதய கம்மன் பில கூறும் கருத்துக்களை பார்ப்போம்.
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலத்தை பிரதானமாக அடிப்படையாகக் கொண்டுள்ளது.
குறித்த வாக்குமூலத்தில், நாமல் ராஜபக்சவிடம் 800,000 அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நிமல் பெரேரா குறிப்பிட்டிருந்ததாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணம் பிரியங்கா விஜேநாயக்கவினால் நிமல் பெரேராவுக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் புலனாய்வாளர்களிடம் இருப்பதாகவும், எனினும் அந்தப் பணத்தை பின்னர் நாமல் ராஜபக்சவிடம் பெரேரா வழங்கினார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேறு எவரும் இல்லாத நிலையில், நாமல் ராஜபக்சவின் மேசையில் 800,000 அமெரிக்க டொலர்களை வைத்ததாக நிமல் பெரேரா கூறியிருப்பதாகவும், அந்தக் கூற்றைத் தவிர நாமல் ராஜபக்சவுக்கு குறித்த தொகை வழங்கப்பட்டதை நிரூபிக்கும் வேறு ஆதாரங்கள் இல்லை எனவும் உதய கம்மன்பில கூறுகிறார்.
இந்தக் கொடுப்பனவுகள் தொடர்பான விவகாரம், எயார்பஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஐக்கிய இராச்சிய நீதிமன்ற நடவடிக்கைகளிலும் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளது.
அந்த நீதிமன்ற நடவடிக்கைகளில், விமானக் கொள்முதல் நடவடிக்கையில் முறையற்ற செல்வாக்கை செலுத்துவதற்கான முயற்சிகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் முறையான தரகுத் தொகையாக அல்லாமல் இலஞ்சமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிமல் பெரேரா குறித்த பணத்தின் ஒரு பகுதியை பின்னர் நாமல் ராஜபக்சவிடம் வழங்கியிருந்தார் எனக் கருதினாலும், அதுவே நாமல் ராஜபக்ச இலஞ்சம் பெற்றார் என்பதை நிரூபிப்பதற்குப் போதுமானதா எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏதாவதொரு வகையில் நாமல் இந்த பேரத்தில் பணம் பெற்றிருக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இப்போது எழுந்துள்ள சந்தேகம் அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்பது தான். நாமலுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிமல் பேரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார்.
அவரை சந்தித்து சமரசம் ஏற்படுத்த மகிந்த தரப்பினர் எவ்வளவு முயன்றும் அது சாத்தியமாகவில்லை. நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார்.
ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது.
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிமல் பெரேரா
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிமல் பெரேரா வழங்கிய சத்திய கடதாசிகளின் அடிப்படையிலேயே நாமல் பின்பு கைது செய்யப்பட்டார் என்பது முக்கிய விடயம். எனவே நாமல் இலஞ்சமாகவே குறித்த பணத்தை நாமல் பெற்றிருக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சி.சி.என்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!