news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஏறாவூupzö பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தவர் மீது கார் மோதிப் பரிதாப பலி

20 Oct, 2026

பாதசாரி கடவையினூடாக வீதியைக் கடக்க முயன்ற நபரொருவர் மீது கார் மோதியதில் அவர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதியில், திங்கட்கிழமை (19) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஆயித்தியமலை, மணிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி லவக்குமார் (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலை பகுதியிலிருந்து செங்கலடிக்கு வந்த குறித்த நபர், அங்கிருந்து கொழும்புக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தை நோக்கிப் பாதசாரி கடவையினூடாக வீதியைக் குறுக்கறுத்தபோதே, ஏறாவூர் பகுதியிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற கார் இவர் மீது மோதியுள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளான நபர் உடனடியாகச் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றார்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!