news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஓமந்தையில் கார் விபத்து: சிறுவன் உட்பட மூவர் காயம்

13 Oct, 2026

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் பயணித்த சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஓமந்தைப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!