துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் துணை விமானி அந்த விமானத்தை டெல்அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டடமான அஸ்ரியேலி மையத்தின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது
நடந்து இருந்தால் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் போன்று வரலாற்றில் இடம்பிடித்து இருக்கும். அதுமட்டுமின்றி ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம்.
இந்த அஸ்ரியேலி மையம் என்பது என்ன? டார்க்கெட்டாக அது தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அஸ்ரியேலி மையம் (Azrieli Center) என்பது இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகரில் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. இங்கு மொத்தம் வானளவுக்கு 3 உயர்ந்த டவர்களாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஒன்று சதுரமாகவும், இன்னொன்று வட்டமாகவும், மற்றொன்று முக்கோண வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் வட்டமாக கட்டப்பட்டுள்ள டவர் 187 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 49 தளங்கள் உள்ளன. உச்சியில் ஒரு ஹெலிபேடு உள்ளது.
169 அடி உயரம் கொண்ட முக்கோண டவரில் 45 தளங்கள் உள்ளன. 154 மீட்டர் உயரம் கொண்ட சதுர டவரில் 41 தளங்கள் உள்ளன. இந்த 3 கட்டங்களிலும் வணிக வளாகங்கள், கடைகள், ஹோட்டல்கள், அலுவகலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கட்டடம் டெல்அவிவ் நகரில் பெகின் சாலை மற்ம் அயலோன் சாலைக்கு இடையே அமைந்துள்ளது. பக்கத்திலேயே ஹாஷலோம் ரயில் நிலையம் உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் இங்கு கூடுவார்கள்.

ஒருநாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்வார்கள் என்று டேட்டாக்கள் சொல்கின்றன. இதனால் இங்கு விமானம் மோதியிருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். குறிப்பாக ஆயிரத்தை தாண்டி இருக்கும். விமானம் மோதும்போது இந்த 3 டவர்கள் மட்டுமின்றி அதனருகே இருக்கும் கட்டடங்களும் சிதைந்து தீப்பிடிக்கலாம் என்பதால் நிச்சயம் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதிகள் நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மொத்தம் 2,977 பேர் வரை பலியாகினர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் வரலாற்றில் இன்று வரை ஆறாத வடுவாக உள்ளது. இந்த தாக்குதல் சுருக்கமாக 9/11 என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று தான் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில் இன்னொரு 9/11 'அட்டாக்' முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!