இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரின் நிதிச் செயல்பாடுகளைக் கவனித்து வந்த 'ரத்மலானே சைமா' என அழைக்கப்படும் தொடிவிலகே தனுஷ்க கௌசல்ய உட்பட மூவர் மலேசியாவில் வச்சு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இவர்கள்இ ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
'ரத்மலானே சைமா' (41 வயது)இ ரத்மலானை - ஜயசுமனாராம மாவத்தையைச் சேர்ந்தவராவார். இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர் மீது கல்கிஸ்ஸ நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்ததுடன்இ சர்வதேச பொலிஸாரால் (ஐவெநசிழட) சிவப்பு எச்சரிக்கை (சுநன ழேவiஉந) விடுக்கப்பட்டிருந்த ஒருவராவார்.
இவருடன் சேர்த்துஇ கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த வினாகே இஷார சலிந்த குமார (31 வயது) மற்றும் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த லத்து ஹென்னதிகே லசந்த லக்மால் சில்வா (35 வயது) ஆகியோரே மலேசியாவில் கைது செய்யப்பட்டு இவ்வாறு கட்டுநாயக்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ருடு-315 என்ற விமானத்தின் மூலம் ஆகஸ்ட் 10ஆம் திகதி மாலை 4.25 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (ஊஐனு) அதிகாரிகளால் சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர்இ மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான குற்றப் பிரிவிடம் (றுநளவநசn Pசழஎinஉந ழேசவா ஊசiஅநள னுiஎளைழைn) இவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!