ஆயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். ஆனாலும் அவருக்கு சினிமா என்றால் அறவே பிடிக்காது என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், கவியரசர் கண்ணதாசனுக்கு சினிமா என்றாலே பிடிக்காது என்றும், தங்களை சினிமா பார்ப்பதற்கே விடமாட்டார் என்றும் அவரது மகள்கள ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.
மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி, தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல், இலங்கியங்கள், கட்டுரைகள், ஆன்மீக புத்தகங்கள் எழுதுவது என தனித்திறமையுடன் இருந்தவர்.
சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள கண்ணதாசன், பல படங்களை தயாரித்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். ஆனாலும் அவருக்கு சினிமா என்றால் அறவே பிடிக்காது என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அதிகமாக கோபம் வரும். தினமும் அப்பாவுக்கு (கண்ணதாசன்) மதிய சாப்பாடு அம்மாதான் போட வேண்டும். அவர் சாப்பிடுவதற்கு 2.30 -3.00 மணி ஆகிவிடும்.
அவர் சாப்பிட வரும் நேரம் அம்மா வீட்டில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவருக்கு கோபம் வந்துவிடும். ஒருமுறை அம்மா ஒரு திருமணத்திற்கு போய்விட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது. பட்டுப்புடவையுடன் வந்து சாப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறார், தாமதமாக இருந்தால், நெய் கிண்ணத்தை எடுத்து அப்படியே அம்மா தலையில் ஊற்றிவிட்டார்.
அம்மா அதற்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். பட்டுப்புடவை வீணாகிவிட்டடே என்றுதான் அவருக்கு வருத்தம்.
அப்பா இல்லாத நேரத்தில் தான் நாங்கள் தியேட்டருக்கே போவோம். ஒருமுறை அப்பா டெல்லிக்கு சென்றிருந்தபோது நாங்கள் படம் பார்க்க தியேட்டருக்கு போனோம்.
ஆனால் அவர் திரும்பி வந்துவிட்டார். விமானம் லேண்டிங் ஆக தாமதம் ஆனது. அவர் லேண்டிங் ஆனவுடன், வீட்டுக்கு போன் செய்ய, அவர்கள் தியேட்டருக்கு போயிருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
உடனடியாக கண்ணதாசன் மனைவி வீட்டுக்கு வரவும் என்று தியேட்டரில் ஸ்டைடு போட்டார்கள். அதன்பிறகு அம்மா வீட்டுக்கு வந்தார். அப்பாவுக்கு சினிமாவே பிடிக்காது எங்களை வெளியிலே விடமாட்டார் என்று கண்ணதான் மகள்கள் கூறியுள்ளனர்.
அவரது சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும ஒன்றாக இணைத்து பார்த்ததே இல்லை. அதனால் தான் எங்களுக்கு சினிமா ஸ்டார்கள் அதிகம் பழக்கமே கிடையாது என்றும் கூறியுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!