news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டானையில் நபரொருவர் அடித்துக் கொலை: மூன்று சந்தேகநபர்கள் கைது!

30 Aug, 2026

கட்டானை பொலிஸ் பிரிவில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன்போது கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொலையை செய்த பிரதான சந்தேகநபர் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேகநபர்கள் உட்பட மூவர் நேற்று சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கதிரான, எத்துக்கால மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்  கட்டான பொலிஸார் ஈடுபட்டு  வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!