news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுநாயக்க வரவிருந்த 9 விமானங்கள் மத்தள மற்றும் இந்திய விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன

22 May, 2026
தற்போது நிலவி வரும் கடுமையான மழையுடனான மோசமான வானிலை காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த 9 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் அவசரமாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. 

அதற்கமைய, கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த கத்தார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 02 விமானங்கள், சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா நிறுவனத்தின் 02 விமானங்கள், அபுதாபியிலிருந்து வந்த எத்திஹாட் நிறுவனத்தின் ஒரு விமானம் மற்றும் குவைத்திலிருந்து வந்த ஜசீரா நிறுவனத்தின் ஒரு விமானம் என மொத்தம் 06 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், டுபாயிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமும், சென்னையிலிருந்து வந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானமும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதுடன், புதுடில்லியிலிருந்து வந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானம் மீண்டும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!