news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கணவனின் குத்து டான்ஸுக்கு மனைவி என்ன செய்தாள் தெரியுமா?

16 Nov, 2026

அண்டை வீடொன்றில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற தனது மகன் நள்ளிரவைக் கடந்தும் வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த தாய் ஒருவர், அவரை அழைத்து வருவதற்காகக் கணவனை அனுப்பிவைத்த பின்னர் அங்கு அரங்கேறிய சுவாரசியமான அசம்பாவிதம் ஒன்று தென் மாகாணத்தில் கிங் கங்கைக்கரைக் கிராமமொன்றிலிருந்து சமீபத்தில் பதிவாகியுள்ளது.

இப்பெற்றோருக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை மட்டுமே உண்டு. இளம்பருவத்தில் உள்ள இம்ளைஞர், சமீப காலமாகத் தனியார் நிறுவனம் ஒன்றில் உத்தியோகத்திற்குச் சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடு ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்திற்கு இம்ளைஞருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர் அங்கிருந்து புறப்படும்போது, “இரவு ஆகுறதுக்கு முன்னால வீட்டுக்கு வந்துடனும்” என்று தாய் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த போதிலும் அவர் வீடு திரும்பவில்லை. தாய் பலமுறை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும், அது வேலை செய்யவில்லை (சுவிட்ச் ஒஃப் செய்யப்பட்டிருந்தது).

பொறுமையின் எல்லை மீறி ஆத்திரமடைந்த தாய், கணவனை நோக்கிச் சீறிப் பாய்ந்து, “போய் அவனோட கன்னத்துல ரெண்டு அறைஞ்சு இழுத்துட்டு வா” என்று கட்டளையிட்டார்.

தூங்கிக் கொண்டிருந்த அந்த மனிதரும், “எனக்கு நிம்மதியாகவும் தூங்க விட மாட்டேங்கிறாங்க” என்று முணுமுணுத்தவாறே நாசியை உறிஞ்சியபடி வீட்டில் இருந்து வெளியே இறங்கினார்.

தம் வீட்டில் இருந்து ஏழு, எட்டு வீடுகள் தள்ளி அமைந்திருந்த, பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்ற வீட்டை அவர் சென்றடைந்தபோது, இளைஞர்கள் குழுவினர் திறந்தவெளியில் நாற்காலிகளைப் போட்டுப் பாட்டப் பாடித் தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கூட்டத்திற்கு நடுவே தனது மகனைத் தேடியவாறு அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் வந்த இளைஞர் ஒருவர் அவர் கையில் கண்ணாடி டம்ளர் ஒன்றைக் கொடுத்து, மற்றொரு கையில் இருந்த போத்தலில் இருந்து அதற்குள் மதுவை ஊற்றினார்.

அதே கணத்தில் மற்றொரு இளைஞர் அவர் கையில் இருந்த போத்தலில் இருந்து சோடாவையும் ஊற்றி, “அடிங்க அங்கிள்” என்றார். சொன்ன தாமதத்தில் அவர் ஒரே மூச்சில் கண்ணாடியிலிருந்த பானத்தைக் குடித்துத் தீர்த்தார். அதனுடன் சேர்த்துச் சுடச்சுடப் பொரித்த மாமிசத் துண்டு ஒன்றும் அவர் கைக்குக் கிடைத்தது.

இப்போது மகனை அழைத்துச் செல்லச் சென்ற தந்தையையும் காணவில்லை. தாய்க்கு உச்சக்கட்டமாக ஆத்திரம் தலைக்கேறியது. வீட்டின் கதவுகள் அனைத்தையும் மூடிய அவரும், பார்ட்டி நடைபெற்ற வீட்டை நோக்கி விரைந்தார். அவர் அங்கு சென்றடைந்தபோது, அவரது கணவரோ இளம் பிள்ளைகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

“வீட்டுல தூங்கிட்டுக் கிடந்தவர், இதோ இங்க வந்து ஆடிக்கிட்டு இருக்காரு” என்று கத்தியவாறு பார்ட்டியே அதிரும் வகையில் கூச்சலிட்ட அவர், கணவரையும் மகனையும் அங்கிருந்து இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

 அடுத்த நாள் அண்டை வீட்டார் மத்தியிலும் இச்சம்பவம் பரவத் தொடங்கியதை அடுத்து, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு தலைமறைவாக வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்திக்கான படம், ஏஐ இனால் வடிவமைக்கப்பட்டது

 


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!