news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கண்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் பெரிய மரம் முறிந்து வீழ்ந்தது ; 2 வாகனங்கள் சேதம் ; இருவர் காயம்

21 Sep, 2026
கண்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று (21) பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், வீதியில் சென்றுகொண்டிருந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 


அந்த வாகனங்களினுள் இருந்த 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சேதமடைந்த வாகனங்களில் ஒன்று, மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. 

மரம் முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சீரற்ற வானிலை  காரணமாக ஏற்படக்கூடிய இதுபோன்ற வீதிப் போக்குவரத்து பாதிப்புகள் தொடர்பில்  கவனம் செலுத்தி வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!