news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கந்தானையில் சோகம்: ஓட்டோவை பந்தாடிய ரயில் இருவர் பலி

09 Jun, 2026
கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையில்,  மூன்று சக்கர வண்டி (ஓட்டோ) ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோர புகையிரத விபத்து செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கந்தானை, புனித மரியா புகையிரதக் கடவையில் புகையிரதம் ஒன்று வந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில், கடவையின் அபாய எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒலிச் சிக்னல்கள் செயற்படுத்தப்பட்டிருந்த  நிலையில் இருந்தபோதே, ஓட்டோ புகையிரதக் கடவையை ஊடறுத்துச் செல்ல முயன்றுள்ளது.

இதன்போது, சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் த்ரீவீலர் மோதியுள்ளது.

இவ்விபத்தில், ஓட்டோவில் பயணித்த ஏக்கலை, ஜோஷிட்டா வத்தையைச் சேர்ந்த எம். ரீட்டா என்ற பெண் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஓட்டோ சாரதியும் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!