கனடாவிலிருந்து இந்தியா வந்த பெண்ணொருவர், தான் காதலித்த 31 வயது இளைஞரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
சுமார் ஒரு வருடமாகவே 'டேட்டிங் செயலி' (Dating App) மூலம் இருவரும் பழகியிருக்கிறார்கள். பின்னர் திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்தியா வந்ததன் பின்னர் அந்த இளைஞர் திருமணத்திற்கு மறுத்ததால், இந்த விவகாரம் கனடா தூதரகம் வரை சென்றுள்ளது.
நடந்தது என்ன? இந்தியாவின் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்தவர் நிதின் (31). அங்குள்ள தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கனடாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்னர் 'டேட்டிங் செயலி' மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
கனடா பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் இருவரும் அந்தச் செயலி வழியாகத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். பின்னர் அவர்களுடைய உரையாடல் சமூக வலைத்தளங்களுக்கும் விரிவடைந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண் கனடாவிலிருந்து இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். சுற்றுலா விசா (Tour Visa) பெற்று, திருமணக் கனவுடன் இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளார்.
காதலனைத் தேடி டெல்லி வந்த பெண் கடந்த நவம்பர் 11ஆம் திகதி அந்தப் பெண் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக நிதின் விமான நிலையத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
பின்னர், இருவரும் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு தனது தாய்மாமா மற்றும் அத்தை வசிக்கும் தொடர்மாடி வீட்டிற்கு அந்தப் பெண்ணை நிதின் அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டில் இருவருமே சுமார் இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர். இதன்போது திருமணம் குறித்த பேச்சும் எழுந்துள்ளது.
அதிர்ச்சியில் ஹரியானா இளைஞர் அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குச் சுமார் 61 வயது என்பதும், நிதினுக்கு 31 வயது என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, இருவருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் உள்ளது. இந்த வயது வித்தியாசத்தை அறிந்து நிதின் அதிர்ச்சியடைந்தார். இதனால் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய நிதின் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
“ஒரு வருடமாகத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, திடீரெனத் திருமணம் செய்ய முடியாது என்றால் என்ன அர்த்தம்?” என நிதினிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனடா தூதரகத்தைத் தொடர்பு கொண்ட பெண் இந்தப் பிரச்சினையை அந்தப் பெண் கனடா தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். தனக்கும் நிதினுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, கனடா தூதரகம் உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளது. இதனடிப்படையில், நீம்ரானா பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக நிதினை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் பிணையில் (ஜாமீன்) விடுவித்தனர். அத்துடன், அந்தப் பெண்ணை ராஜஸ்தானின் கோட்புட்லியில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் (Care Centre) தங்க வைத்துள்ளனர். தற்போது அவரைப் பாதுகாப்பாக மீண்டும் கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!